மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் - பொதுச்செயலாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்த நிகழ்வு... இன்று (20-01-2022) மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை ஆசிரியர்களின் பாதுகாவலர் நமது இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் திரு. இரா. தாஸ் அவர்களுக்கும் மாநிலதலைவர், பொருளாளர் மற்றும் பொறுப்பாளர்கள் சந்தித்து இயக்க நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பு ஆகியவற்றை அளித்து கொரோனாகாலத்தில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு இடர்பாடுகள் பற்றியும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள் பற்றி தெரிவித்தனர். *மாண்புமிகு அமைச்சர்* அவர்களை அவரது இல்லத்தில் இயக்க தோழர்களோடு நமது பொதுச் செயலாளர் அவர்கள் உள்ளே நுழைந்ததும் மிகவும் மகிழ்ந்து வாங்க அண்ணா என்று அழைத்து நலம் விசாரித்தார். பொதுச் செயலாளர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்த நாளில் சந்திக்க முடியாததை கூறி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் நாட்காட்டி வழங்கியதும் அதை பக்கம் பக்கமாக திரும்பி பார்த்து ரசித்தார்கள்.அதில் எந்த படம் தங்களுக்கு பிடிக்கிறது...