அகவிலைப்படி உயர்வுக்கு நன்றி... முதலமைச்சர் அவர்களுக்கு பொதுச்செயலர் நன்றி....
இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நமது பொதுச்செயலாளர் திரு. இரா.தாஸ் அவர்கள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதோடு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்தார். மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருதல், அகவிலைப்படி நிலுவை,சரண்டர்,ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். அப்போது மாண்புமிகு முதல்வர் அவர்கள் விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக நமது பொதுச்செயலாளர் அவர்களிடம் உறுதி அளித்தார்.