விழுப்புரம் கட்டட திறப்பு விழா ஆயத்தம்
வானில் இருந்து
பூ மழை.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டக் கட்டட திறப்புவிழா காண உள்ளது அந்த நாளில் இயக்க நிறுவனர் மாவீரன் ச.அப்துல் மஜீத் அவர்கள் வானில் இருந்து பூ மழை பொழிவார்கள்.
நவம்பர் 03-11-2024 விழுப்புரம் நகரம் தேர்திரு விழாவைப் போல எங்கு பார்த்தாலும் ஆசிரியர் கூட்டமாக காணும் வகையில் கட்டடத் திறப்பு விழாவை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்றில்
மணி மகுடத்தில் பதிக்கு மேலும் ஒரு வைரமாக கட்டடம் மிளிரப் போகிறது.
இதற்குக் காரண மானவர்கள் இயக்கத்தின் மீது மாறா பற்று கொண்ட இயக்க கண்மணிகள் என்று எண்ணும் போது உள்ளம் மகிழ்கிறது, வானத்தின் நட்சத்திரங்களை எட்டி தொட்டுவிட்ட உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுவதில் வியப்பில்லை.
கட்டடத்திற் காக வாரிக் கொடுத்த வள்ளல்களை எத்தனை பாராட்டினாலும் தகும், இதோ நான் தருகிறேன் நான் ஆசிரியராக இருந்ததற்கு அடையாளமாக தருகிறேன் என்று அள்ளிக் கொடுத்து, இதற்காக அல்லும் பகலும் உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்நாளில் நன்றிகள் பலப்பல.
இயக்க நிறுவனர் வாங்கிக் கொடுத்த இடத்தில் மாபெரும் ச.அப்துல் மஜீத் மாளிகை
கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை நம்மிடத்தில் ஏற்படுத்தி பம்பரமாக சுழன்று அல்லும் பகலும் அயராது உழைத்து தனது காலத்தில் இயக்கத்தின் வரலாற்றில் இடம் பெறும் வகையில் கட்டடத்தை கட்டி முடிக்க காரணமாக இருந்து,வழிகாட்டி நமது இனமான பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்களை உள்ளத்தின் உச்சியில் வைத்து போற்ற வேண்டும், மாநாட்டு
மக்கள் வெள்ளத்தில் பாராட்டி மகிழ வேண்டும் என்று மனம் ஆசைப் படுகிறது.
விழுப்புரத்திலே
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
கல்வி பாதுகாப்பு மாநாடு
நவம்பர் 03 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்துவைத்து உரையாற்ற உள்ளார்கள்.
மாநாட்டு மலர் மாண்புமிகு அமைச்சர் வெளியிட உள்ளார்கள்.
நாம் ஏற்கனவே திட்டமிட்டு இருந்த மலர் தயாரிப்பு பணியை விரைவு படுத்த வேண்டும்.
மலரில் இடம் பெற வேண்டிய தலைப்பு.
1.இயக்க நிறுவனரின் நினைவலைகள்.
2.கலைஞரின் நூற்றாண்டில்
கல்வி வளர்ச்சியும் ஆசிரியர் உயர்வும்.
(கவிதை/கட்டுரை)
ஒரு பக்க அளவில் தட்டச்சு செய்து கணினி வழியாக அனுப்பிட வேண்டும்.
ஒரு வட்டாரத்திற்கு ஒரு கவிதை அல்லது நினைவலைகள்
இடம் பெற வேண்டும்.
மேலும் வட்டாரங்கள் தங்களுடைய வட்டார சிறப்புகளை புகைப்படம் உள்ளடக்கி ஒரு பக்கத்திற்கு விளம்பரம் அளிக்க வேண்டும்.
மேற்கண்ட செயல்பாடு கணினி வழி 10-10-2024 க்குள் மாநில அமைப்புக்கு கிடைக்கும் வகையில் துரிதப்படுத்த வேண்டும்.
மேலும் போராட்டத்தில் சிறை சென்ற செம்மல்களின் புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு)
ஆசிரியர் பெயர் பதவி
சிறை சென்ற தேதி ஆகியவற்றை உடன் கணினி வழி அனுப்பிட வேண்டும்,நினைவுப்பரிசு வழங்க இருப்பதால் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும் .
மாநாட்டு நிதியை பொதுச் செயலாளர் அவர்களின் சுற்றுப் பயணத்தில் அளித்திடும் வகையில் ஏற்பாடுகள் துரிதப்படுத்த வேண்டும்.
குறிப்பு
அடுத்த கடிதத்தில் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் பெயர்கள் தெரிவிக்கப்படும்.
கவிதை/கட்டுரை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: taakmanaadu@gmail.com
மாநில அமைப்பு
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
Comments