தேர்தல் பணி ஊழியர்கள் வாக்களிக்க தனிவாக்குச்சாவடி : அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை


தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள் வாக்களிக்க சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளை அமைத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்
சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்
பணியாளர் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தலில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், காவல் துறையினர் தேர்தல் பணியில் இருந்தனர். தேர்தல் முடிவடைந்த பின்பு தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தபால் மூலம் வாக்களிக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்த நடைமுறை எளிமையானதாகவும், உறுதிப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களும் இல்லாததால் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் வாக்களிக்க இயலாத நிலை இன்று வரை தொடர்கிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 8ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை அரசுப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை வரும் 16ம் தேதி நடைபெற உள்ளதால் இனி வாக்குச்சீட்டுகளை அனுப்பி தபால் வாக்களிப்பது என்பது இயலாத நிலையாக உள்ளது. எனவே, தேர்தலில் பணியாற்றிய ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமைகளை நிறைவு செய்ய மாநிலம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு பிரத்யேக வாக்குச்சாவடி அமைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Comments

Popular posts from this blog

ஆணையருடன் சந்திப்பு -மாநிலத் தலைவர் அறிக்கை

இடைநிலை ஆசிரியர்களை கடைநிலை ஊழியர்களாக்காதே

ஆசிரியர் இனக்காவலர் மாவீரன் அப்துல் மஜீத் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி...