டில்லி சலோ.......
பிளஸ் டூவில் பிரமாதமான மார்க் எடுத்த பிள்ளையிடம், ' நீ பி.ஏ. எகனாமிக்ஸ் படி ..!' என்று சொன்னால், அவனுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும்..?
இந்த பட்ட படிப்பு நம்மூரை பொருத்த வரை, ஜஸ்ட் பாஸ் கேஸுகளுக்கென்றே உருவாக்க பட்டது. ஆனால், டில்லி செயின்ட். ஸ்டீஃபன் காலேஜை பொருத்த வரை, அப்படி இல்லை.
இந்த காலேஜில், பி.ஏ. எகனாமிக்ஸுக்கான போன வருஷத்து கட் ஆஃப் மார்க் 96.75 %. அதற்கு முந்தைய வருஷம் 100% என்று ஞாபகம்.
பி.ஏ சரித்திரத்துக்கும் ஏறக்குறைய அதே அளவு டிமாண்ட்.
மிக பெரிய அளவில் பொருளாதார மேதைகளையும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் உருவாக்கிய கல்லூரி.
இரு நாட்டினுடைய முன்னாள் ஜனாதிபதிகள் இந்த கல்லூரியின் பழைய மாணவர்கள்.
பின்னாளில் கலக்டர் ஆகும் கனவு இருப்பவர்கள், குறித்து வைத்து கொள்ளுங்கள்.
பட்ட படிப்புக்கு இந்த கல்லூரியும், அதற்கு பின்னைய டிரைனிங்குக்கு 'டில்லி ராவ்ஸ் இன்ஸ்டிட்யூட்'டும் உங்களுக்கு சரியான ஆப்ஷன்.
டில்லி சலோ..
நன்றி- சண்முகநாதன் சுவாமிநாதன்
Comments