+ 2 முடிவுக்கு காத்திருப்பவர்களுக்காக

இஞ்சினீயரிங் மற்றும் அறிவியல் இரண்டுக்குமான தொடர்பு மிகவும் ஆழமானது.

உதாரணத்துக்கு, எலெக்ட்ரானிக்ஸ் எஞ்சினீயரிங்கில் இருக்கிற பாடங்களை எம்.எஸ்ஸி பௌதிகத்தில் படிப்பார்கள். அறிவியலின் அப்ளிகேஷனாக இஞ்சினீயரிங்கை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்த இரண்டு துறையிலுமே சிறப்பதற்கான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. எஞ்சினீயரிங்கின் மிக சிறந்த கல்வியை IIT கொடுக்கிறதென்பது பொதுவான கருத்து. அதே போல அறிவியல் படிக்க மிக சிறந்த இடமாக கருத படுவது பெங்களூரில் இருக்கும் Indian Institute of Science (IISc).

இஞ்சினீயரிங், பயாலஜி, கெமிஸ்ட்ரி, என்விரோன்மென்ட் சயன்ஸ், மெடீரியல்ஸ், கணக்கு மற்றும் ஃபிஸிக்ஸ் ஆகியவை பயிற்றுவிக்க படுகின்றன. இவை எல்லாமே, நான்கு வருடம் படிக்க வேண்டிய பி.எஸ். படிப்புகள் (பி.எஸ்.ஸி அல்ல) .

பெரும் விஞ்ஞானிகளான ஹோமி பாபா, விக்ரம் சாரா பாய், மோரிஸ் ட்ரேவர்ஸ், G.N. ராமசந்திரன், A.ராமச்சந்திரன் , ஹரிஷ் சந்திரா, ராமசேஷன், ரோத்தம் நரசிம்மா, கோவர்தன் மேத்தா மற்றும் சதீஷ் தவான் ஆகியோர் IISc யில் மாணவனாகவோ, ஆசிரியராகவோ அல்லது டைரக்டராகவோ இருந்திருக்கிறார்கள்.

இதன் டைரக்டராக இருந்த சி.வி .ராமன் நோபெல் பரிசையும், C.N.R . ராவ் பாரத ரத்னாவையும் வென்றவர்கள்.

இந்தியாவின் முதல் ஐ ஐ டி யை உருவாக்கிய J.C. கோஷும் இங்கே டைரக்டராக இருந்தவர்தான்.

உலகத்தின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான இதை தமிழ் பிள்ளைகள் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை என்பதுதான் கொடுமை

Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...