மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் - பொதுச்செயலாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்த நிகழ்வு...
இன்று (20-01-2022) மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை ஆசிரியர்களின் பாதுகாவலர் நமது இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் திரு. இரா. தாஸ் அவர்களுக்கும் மாநிலதலைவர், பொருளாளர் மற்றும் பொறுப்பாளர்கள் சந்தித்து இயக்க நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பு ஆகியவற்றை அளித்து கொரோனாகாலத்தில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு இடர்பாடுகள் பற்றியும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள் பற்றி தெரிவித்தனர்.
*மாண்புமிகு அமைச்சர்* அவர்களை அவரது இல்லத்தில் இயக்க தோழர்களோடு நமது பொதுச் செயலாளர் அவர்கள் உள்ளே நுழைந்ததும் மிகவும் மகிழ்ந்து வாங்க அண்ணா என்று அழைத்து நலம் விசாரித்தார்.
பொதுச் செயலாளர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்த நாளில் சந்திக்க முடியாததை கூறி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் நாட்காட்டி வழங்கியதும் அதை பக்கம் பக்கமாக திரும்பி பார்த்து ரசித்தார்கள்.அதில் எந்த படம் தங்களுக்கு பிடிக்கிறது என பொதுச்செயலாளர் கேட்க மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சில படங்களை சுட்டிக் காட்டினார்கள்.மேலும் இயக்க இதழை வாங்கி பார்த்து பாராட்டினார்.
மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் பொதுச் செயலாளர் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அவற்றின் தொகுப்பு பின்வருமாறு...
1.பொது மாறுதல் கலந்தாய்வை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடத்தி முடிக்க வேண்டும்.
2.அரசாணை 101.இரத்து செய்யவேண்டும்.
3.இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
4கூடுதல் பணியிடங்களில் ஆசிரியர் நியமனம் செய்யவேண்டும், LKG ,UKG நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை மீளவும் பழைய இடத்தில் நியமிக்க வேண்டும் எனவும்
மேலும் ஒமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற நிலையில் தற்போது நடைபெறும் பயிற்சியில் ஆசிரியர்கள் அச்சத்துடன் பயிற்சிக்கு செல்லும் நிலை உள்ளது,ஆசிரியர்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளைமாண்புமிகு அமைச்சர் அவர்களிடத்தில் வலியுறுத்தி பேசினார்.
மேலும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் அதேஇடத்தில் நியமிக்க கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கிட நடவடிக்கை எடுத்ததற்காக பொதுச்செயலாளர் அவர்கள் நன்றி கூறினார்கள்.மேலும் மாவட்ட அளவில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தாய் ஒன்றியத்திற்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கிட நடவடிக்கை எடுத்த அதேசமயம் அந்த ஒன்றியத்தில் ஏற்கனவே பதவி உயர்வில் உள்ள ஆசிரியர்களின் உரிமை பாதிக்காத வகையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கலந்தாய்வு தொடர்பாக இயக்கம் வைத்த கோரிக்கைகளை செயல்படுத்தியதற்காக பொதுச் செயலாளர் அவர்கள் அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசும்போது கலந்தாய்வை உறுதியாக நடத்துவதாகவும், தேவைக்கேற்ப புதிய ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அரசாணை 101.இரத்து செய்வது குறித்து ஆலோசனை செய்வதாகவும் கூறினார்.
-- தலைமை நிலைய செய்தி
Comments