தமிழ்நாடு அரசு - டிட்டோ ஜாக்குடன் பேச்சு வார்த்தை

நமது பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் நீதிமன்ற தீர்ப்பு நமக்கு எதிராக வந்தவுடன் டிட்டோஜாக் கூட்டத்தை கூட்ட முயற்சி எடுத்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.நேற்று மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து பதவி உயர்வு தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தி பேசினார்கள். மேலும் டிட்டோஜாக் கூட்டத்தில் எடுத்த நடவடிக்கை குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரை சந்தித்து டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்து விவாதித்தனர். இன்று அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து 09-06-23 ல் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. கூட்டு நடவடிக்கை குழு முதல் கட்டமாக வெற்றியை நோக்கி பயணிக்கிறது. தொடர்ந்து களப்பணி ஆற்றி வெற்றி பெறுவோம். விரைந்து நடவடிக்கை எடுத்த மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களுக்கும், மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கும், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கும் நன்றி. ஆ.இலட்சுமிபதி மாநிலத் தலைவர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.