டிட்டோஜாக் நடவடிக்கை இயக்குனர்களுடன் சந்திப்பு






  இன்று 06-06-23 காலை சென்னையில் டிட்டோஜாக் உயர்மட்டக்குழு கூட்டம் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில கட்டடத்தில் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.ச.மயில் தலைமையில் நடைபெற்றது அதில் டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு   ஆசிரியர்களின் பதவி உயர்வு,நீதிமன்ற தடை,அடுத்து எடுக்க வேண்டிய   நடவடிக்கைகள் பற்றி கூட்டத்தில் விவாதித்து மூன்று கட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு   வெளியிடப்பட்டது .

 உடன் டிட்டோஜாக் உயர்மட்ட குழு தலைவர்கள்   மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர்   க.அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு மற்றும் போராட்ட தகவலை தெரிவித்தனர். 


Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...