விழுப்புரம் கட்டட திறப்பு விழா ஆயத்தம்
வானில் இருந்து பூ மழை. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டக் கட்டட திறப்புவிழா காண உள்ளது அந்த நாளில் இயக்க நிறுவனர் மாவீரன் ச.அப்துல் மஜீத் அவர்கள் வானில் இருந்து பூ மழை பொழிவார்கள். நவம்பர் 03-11-2024 விழுப்புரம் நகரம் தேர்திரு விழாவைப் போல எங்கு பார்த்தாலும் ஆசிரியர் கூட்டமாக காணும் வகையில் கட்டடத் திறப்பு விழாவை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்றில் மணி மகுடத்தில் பதிக்கு மேலும் ஒரு வைரமாக கட்டடம் மிளிரப் போகிறது. இதற்குக் காரண மானவர்கள் இயக்கத்தின் மீது மாறா பற்று கொண்ட இயக்க கண்மணிகள் என்று எண்ணும் போது உள்ளம் மகிழ்கிறது, வானத்தின் நட்சத்திரங்களை எட்டி தொட்டுவிட்ட உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுவதில் வியப்பில்லை. கட்டடத்திற் காக வாரிக் கொடுத்த வள்ளல்களை எத்தனை பாராட்டினாலும் தகும், இதோ நான் தருகிறேன் நான் ஆசிரியராக இருந்ததற்கு அடையாளமாக தருகிறேன் என்று அள்ளிக் கொடுத்து, இதற்காக அல்லும் பகலும் உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்நாளில் நன்றிகள் பலப்பல. இயக்க நிறுவனர் வாங்கிக் கொடுத்த இடத்தில் மாபெரும் ச.அப்துல் ம...