கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு


 ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 26/12/2022 அன்று சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.


 தமிழக ஆரம்பப்பளளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் ஆகிய இரா.தாஸ் மற்றும் ஜே.காந்திராஜ் ஆ.செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

அதில் கீழ்க்கண்ட முடிவுகள் தீர்மானிக்கப்பட்டன.

பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் முடக்கப்பட்ட அகவிலைப்படி,சரண்டர் உடனே வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

 தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சத்துணவு,அங்கன்வாடி,MRB செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோரு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 05/01/23 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில் வருகின்ற 08/01/2023 மதுரையில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் கூட்டி அடுத்த கட்ட இயக்கத்தை திட்டமிட உள்ளோம் என்று அறிவித்துள்ளனர்.

இக்கூட்டத்தில் அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

ஆணையருடன் சந்திப்பு -மாநிலத் தலைவர் அறிக்கை

இடைநிலை ஆசிரியர்களை கடைநிலை ஊழியர்களாக்காதே

ஆசிரியர் இனக்காவலர் மாவீரன் அப்துல் மஜீத் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி...