பொதுச்செயலாளர் அவர்களின் பத்திரிகை செய்தி...




தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு இரா.தாஸ் அவர்களின் பத்திரிகை செய்தி குறிப்பு 

இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் ஆகிய திரு இரா.தாஸ் அவர்கள் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில்

" சம வேலைக்கு சம ஊதியம் என்னும் ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் டிசம்பர் 27ஆம் தேதி முதல், DPI வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த ஊதிய முரண்பாடு மிகப்பெரிய அநீதி என்றும், இடைநிலை ஆசிரியர்களின் இந்த ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் என்றும் நீண்ட நாட்களாகவே அரசை வலியுறுத்தி வருகிறோம். ஜாக்டோ ஜியோ விலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.

எனவே இடைநிலை ஆசிரியர்களின் இந்த ஊதிய முரண்பாட்டை போக்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களும் உடனடியாக கோரிக்கையை பரிசீலித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.






Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...