ஆணையருடன் சந்திப்பு -மாநிலத் தலைவர் அறிக்கை
நன்றி மறப்பது நன்றன்று
இன்று 07-02-2022 மதியம் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மதிப்புமிகு பள்ளிக் கல்வி ஆணையாளர் அவர்களை சந்திக்க 3.30 மணி அளவில் அலுவலகம் சென்றோம், பார்வையாளர்கள் அறையில் அமர்ந்து இருந்தோம் சந்திக்கின்ற நேரம் நெருங்கும் வேளை, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு மதிப்புமிகு ஆணையாளர் அவர்கள் செல்லவேண்டிய நிலையில், கூட்டம் முடிந்து வரும் வரை காத்திருந்தோம். ஏழு மணி அளவில் ஆணையாளர் அவர்கள் மீண்டும் அலுவலகம் வருகை தந்தார்கள்.அச்சமயம் நேரில் சந்தித்த நிகழ்வு.
1.முதலில் LKG, UKG க்கு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய பணிநிலைக்கே மாறுதல் பெற தொடர்ந்து நாம் வலியுறுத்தியதின் அடிப்படையில்,மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், பள்ளிக் கல்வி ஆணையாளர் அவர்களின் அறிவுரத்தலின்படி மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் உரிய ஆணை வெளியிட்டதற்கு ஆணையாளர் அவர்களிடம் இடைநிலை ஆசிரியர்களின் கெளரவத்தை பாதுகாத்ததற்காக இயக்கத்தின் சார்பில் நமது பொதுச் செயலாளர் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.
2.நடந்து கொண்டு இருக்கும் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மிகச் சிறப்பாக நடைபெற, உரிய வழிமுறைகளை அவ்வப்போது வழங்கி,கலந்தாய்வை நடத்தும் முறைகளை பாராட்டி பொதுச் செயலாளர் அவர்கள் பேசினார்கள்.
3.விழுப்புரம் மாவட்டம் காணை வட்டார ஆசிரியர் திரு.கண்ணன், திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டார ஆசிரியர் திரு.அன்பழகன் ஆகியோர் பணியிறக்கம் செய்யப்பட்டு (உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட தால்) பாதித்து உள்ளதை சுட்டிக்காட்டி அவர்கள் மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலையை மாற்றி கலந்தாய்வில் பங்கேற்க ,வழிகாட்டல் நெறிமுறைகள் ஆணை வழங்க வேண்டுமாய் பொதுச் செயலாளர் அவர்கள் மதிப்புமிகு ஆணையாளர் அவர்களை கேட்டுக் கொண்டார்கள்.
4.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் சிறை சென்ற செம்மல் திரு.குமரேசன் அவர்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த சிறப்பு நிகழ்வாக மாறுதல் முன்னுரிமையை தரமறுத்ததால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர் குமரேசன் அவர்களின் நியாமான கோரிக்கையை செயல்படுத்த வேண்டும் என்று ஆணையாளர் அவர்களை கனிவுடன் கேட்டுக் கொண்டார்கள்.
அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.
5.பணிநிரவலில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பாதிக்காத வகையில் கலந்தாய்வு தேதியில் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பணிநிரவலை தவிர்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். உதாரணமாக சிவகாசி வட்டாரத்தில் உள்ள பிரச்சனைகளை எடுத்துக்கூறினார்கள்.
6.மேலும் அரசாணை 101 உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இது தொடர்பாக தொடர்ந்து மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர்,பள்ளிக் கல்வி செயலாளர்,பள்ளிக் கல்வி ஆணையாளர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை மதிப்புமிகு ஆணையாளர் அவர்களிடத்தில் எடுத்துக்கூரி, மீண்டும் இன்று 101 அரசாணை தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.மேலும் இந்த அரசாணையால் ஏற்படும் பாதிப்புகளை பொதுச்செயலாளர் அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.
அதற்கு ஆணையாளர் அவர்கள் இப்போது நடைபெற்ற கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது என்றும் விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறினார்கள்.
7. SC,ST, MBC, சிறுபான்மையினர் பெண்பிள்ளைகள் கல்வி உதவித் தொகை பெற்று வழங்குவதில் பல்வேறு இடர்பாடுகள் இருப்பதையும், வங்கியில் கணக்கு துவங்க தேவையற்ற காலதாமதம் ஆகிறது, கணக்கு எண் பெற சில வங்கிகள் டெபாசிட் தொகை கேட்கின்றனர், கிராமப்புற ஏழை எளிய மாணவர்களால் கணக்கு துவங்க முடிய வில்லை,எனவே ஏற்கனவே இருந்த அஞ்சலகம் மூலம் பணத்தை மாணவர் பெயரில் செலுத்தும் நடைமுறை காலதாமதத்தை குறைப்பதுடன், பெற்றோர்களுக்கும் அஞ்சலகத்தில் கணக்கு துவங்குவது எளிமையாக இருக்கும், எனவே அஞ்சலகம் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ள உரிய வழிமுறைகளை பிறப்பிக்க வேண்டும் என நமது பொதுச் செயலாளர் அவர்கள் மதிப்புமிகு ஆணையாளர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்கள்.
அதற்கு ஆணையாளர் அவர்கள் எளிமையான வழிமுறைகளை பின்பற்றி அஞ்சலகம் மூலம் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்.
8.மேலும் அன்றாடம் புள்ளிவிபரங்களை கேட்பதும் தலைமை ஆசிரியர்கள் அன்றாடம் புள்ளிவிபரங்களை தயார் செய்து அலுவலகத்தில் ஒப்படைக்க, ஆசிரியர்கள் படுகின்ற சிரமங்களை எடுத்துக்கூறி புள்ளி விபரங்கள் கொடுக்கவே நேரம் போதவில்லை, இதனால் பிள்ளைகளுக்கு கற்றல் கற்பித்தல் செயல்பாடு பாதிப்படைகின்றது எனவே, EMIS புள்ளிவிபர தொகுப்பில் அனைத்து தகவலும் இருக்கும் நிலையில் தோவையில்லாமல் படிவத்தை தயார் செய்து அலுவலகத்தில் ஒப்படைப்பது காலவிரயமாக உள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் CRC அளவில் ஒரு புள்ளிவிபர தொகுப்பாளரை நியமித்து சார்ந்த பள்ளிகளின் புள்ளி விபரங்களை பெற்று உரிய அலுவலருக்கு அனுப்பும் பணியை செய்ய ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஆணையாளர் அவர்களை பொதுச் செயலாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
அதற்கு ஆணையாளர் அவர்கள் புள்ளிவிபரம் தயார் செய்யும் பணியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்.
9.மேலும் தொடக்க நிலை ஆசிரியர்கள் உயர்கல்வி பயில குறிப்பாக சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களில் P.hD பயில அனுமதி மறுக்கப்படுவதை சுட்டிக்காட்டி அனுமதி வழங்க உரிய நெரிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
கல்வி பயில தடையில்லை, தடை இருந்தால் அதை நீக்குவோம் என ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
10.திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் நீண்டநாள் பிரச்சனையாக உள்ள தெலுங்கு தமிழ் ஆசிரியர்களின் பதவி உயர்வு பிரச்சனையில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
அதற்கு ஆணையாளர் அவர்கள் ஆலோசனை செய்து கொண்டு இருக்கின்றோம் அந்தபிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்து நடைமுறைபடுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்.
இதுவரை கலந்தாய்வு தொடர்பாக நான்கு முறை பள்ளிக் கல்வி ஆணையாளர் அவர்களையும், மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களையும் நேரிலும்,பலமுறை தொலை பேசியிலும் பேசியதோடு, மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் அறிவொளிஅவர்களை நேரிலும்,தொலைபேசியிலும் பலமுறை தொடர்பு கொண்டு கலந்தாய்வு தொடர்பாக நமது பொதுச்செயலாளர் திரு.இரா.தாஸ் அவர்கள் பேசி பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுத்த நமது பொதுச்செயலாளர் அவர்களின் உழைப்பை எண்ணிப் பார்த்தால் நமது இயக்கம் எப்படி செயல்பட்டு, ஆசிரியர்களின் பாதுகாவலனாக உள்ளது என்பது தெரியும்.
சந்திப்பின் போது மாநிலத் தலைவராகிய ஆ.இலட்சுமிபதியாகிய நானும் உடனிருந்தேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய சந்திப்பில் (07-02-2022) மாநிலத் தலைவர் ஆ.இலட்சுமிபதி, மாநிலப் பொதுச்செயலாளர் திரு.இரா.தாஸ், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் த.அறிவழகன் மற்றும் நிர்வாகிகள் தர்மலிங்கம் கண்ணன்,குமார்,விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
உழைப்போடும் விழிப்போடும் செயல்படுபவர் நமது பொதுச்செயலாளர் அவர்கள் என்பதை ஒவ்வொரு செயலிலும் செய்து காட்டுகிறார்கள்.
*உழைப்பை போற்றுவோம் !*
*உரிமைக்கு குரல் கொடுப்போம் !!*
*உரிமையை*
*வென்றெடுப்போம் !!*
*ஆ.இலட்சுமிபதி*
மாநிலத் தலைவர்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
Comments