ஐம்பெரும் விழா கண்ட செங்கம் வட்டாரம் - பொதுச்செயலாளர், மாநிலத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு
நேற்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செங்கம் வட்டாரத்தின் சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் நமது போர்வாள் பொதுச் செயலாளர் அண்ணன் இரா.தாஸ் மற்றும் செயல்வீரர் மாநிலத் தலைவர் திரு லட்சுமிபதி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்குபெற்று விழாவினை சிறப்பித்தனர்.
செங்கம் வட்டார தலைவர் திரு. குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நமது மாநிலத்தலைவர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவாகவும், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டு விழாவாகவும் அமைந்த இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு அப்துல் மஜீத் விருது மற்றும் தேசிய திறனறித் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு பெற்ற மாணவர்களுக்கு அப்துல் கலாம் விருதும் வழங்கி நமது பொதுச் செயலாளர் இரா தாஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் துணைப் பொதுச் செயலாளர் திரு. முருகன், மகளிர் அணி செயலாளர் திருமதி. டெய்சிஅறச்செல்வி மாநில துணைத்தலைவர்கள் சுரேஷ், சிவலிங்கம், மாலதி,கடலூர் மாவட்டச் செயலாளர் திரு.நமச்சிவாயம் ,செங்கம் வட்டார செயலாளர் திரு.குமரேசன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Comments