பொதுச்செயலாளர் அவர்களுக்கு மாநிலத்தலைவர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து மடல்....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
💐💐💐💐💐💐💐
சுழலுகின்ற
சூரியனுக்கு
ஓய்வுண்டா ?
சுற்றுகின்ற
பூமிக்கு
ஓய்வுண்டா ?
வீசுகின்ற
காற்றுக்கு
ஓய்வுண்டா ?
அவைகளுக்கு
ஓய்வு இல்லை
அவைகள்
ஓய்வெடுத்தால்
நாம் ஓய்ந்து விடுவோம் !
அதுபோல
சுற்றிவரும்
சூரியனாய்,
சுழலுகின்ற
பூமிப் பந்தாய்
வீசுகின்ற
தென்றலாய்
அன்பையும் ,அறிவையும்
மூலதனமாக
கொண்டு
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
என்ற தேரினை
தலைமையேற்று
தக்கதோர்
படை வீரர்களான
இயக்க கண்மணிகளை
அன்பு, அரவணைப்பு, பாசம்
என்ற கயிற்றைக்
கொண்டு
திருவிழா நடத்துகின்ற
இனமான
நமது பொதுச் செயலாளர்
இரா .தாஸ் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க பல்லாண்டு
வளமுடனும்
நலமுடனும்
பிள்ளைகள்
சுற்றம்
நட்பு துணை கொண்டு வாழ வேண்டும்.
ஆசிரியர் சமுதாய
நலன் காக்கவும்,
ஆசிரியர்கள்
துயரங்கள் களைந்திடவும்
இந்தாண்டு இனிதே அமைய
வாழ்த்துகிறேன்.
ஆ.இலட்சுமிபதி
மாநிலத் தலைவர்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
Comments