தொடக்கக்கல்வி இயக்குனருடன் டிட்டோஜாக் பிரதிநிதிகள் சந்திப்பு

தொடக்கக்கல்வி இயக்குநருடன் டிட்டோஜாக் சந்திப்பு நிறைவு. மாலை டிட்டோஜாக் அவசர கூட்டம்
இன்று (20.2.2014) காலை டிட்டோஜாக் நிர்வாகிகளை தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் இளங்கோவன் நேரடியாக அழைத்து 7 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசினார். கிட்டதட்ட 90 நிமிடங்களுக்கு மேலான இந'த சந்திப்பில் நமது கோரிக்கையின் நியாயங்களை ஒவ்வொரு இயக்கத்தின் தலைவர்களும் விரிவாக பேசினர். இயக்குநர் அவர்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து அனைத்து விசயங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த விசயங்கள் அனைத்தையும் உடனடியாக கல்வித்துறை செயலரிடம் எடுத்துரைப்பதகவும், கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு சபிதா அவர்களை டிட்டோஜாக் தலைவர்களுடன் சந்திக்கும் ஏற்பாட்டை இன்று மாலைக்குள் தெரிவிப்பதாகவும் இன்முகத்துடன் கூறினார். இச்சந்திப்புக்கு முன்னதாக காலை 10 மணிக்கு டிட்டோஜாக் கூட்டம் தொடக்கக்கல்வி இயக்குநரகம் பார்வையாளர் அறையில் நடந்தது. இதில் இயக்குநரிடம் விவாதிக்க வேண்டிய விசயங்கள் விவாதிக்கப்பட்டது. இச்சந்திப்பில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகிய டிட்டோஜாக் உறுப்பு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலை டிட்டோஜாக் அவசர கூட்டம் நடைபெறுகிறது. தொடக்கக்கல்வி இயக்குநர் வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு டிட்டோஜாக்கை கேட்டுக்கொண்டதற்கு மார்ச் 6 ல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என கூறினர். மொத்தத்தில் டிட்டோஜாக் போராட்டத்தில் அரசாங்கம் தன் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. முடிவு சாதகமாக அமைய வாழ்த்துக்கள்

Comments

Popular posts from this blog

ஆணையருடன் சந்திப்பு -மாநிலத் தலைவர் அறிக்கை

இடைநிலை ஆசிரியர்களை கடைநிலை ஊழியர்களாக்காதே

ஆசிரியர் இனக்காவலர் மாவீரன் அப்துல் மஜீத் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி...