ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் முதல்கட்ட வெற்றி... தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

பழைய ஓய்வூதியத் திட்டம்,பணிப்பாதுகாப்பு, சரண்டர், ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறது இவற்றின் தொடர்ச்சியாக இதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட நிகழ்வாக கோட்டை முற்றுகை போராட்டத்தை நடத்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்து அதற்கான கலந்துரையாடல் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதன் காரணமாக தமிழக அரசு அமைச்சர்கள் குழு ஜாக்டோ ஜியோ உடன் பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளது. நமது பொதுச் செயலாளர் திரு இரா.தாஸ் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள், இன்று காலை 10:30 மணி அளவில் திரு எ.வ. வேலு, திரு தங்கம் தென்னரசு, திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அடங்கிய ஆகியோர் அடங்கிய அமைச்சர்களுக்கு குழு உடன் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.