கொள்ளிடத்தில்‌ தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணி சார்பில்‌ இயக்கக் கொடியேற்றும்‌ நிகழ்ச்சி

 




மயிலாடுதுறை மாவட்‌டம்‌, கொள்ளிடத்தில்‌ தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின்‌ சார்பில்‌ இயக்ககொடியேற்று விழாவும்‌, ஆசிரியர்களுக்கு பணி நிறைவுபாராட்டு விழாவும்‌ நடைபெற்றது. விழாவிற்கு வட்டார தலைவர்‌ சிங்காரவேலு தலைமை வகித்தார்‌. வட்டார செயலாளர்‌ சங்‌கர்‌ வரவேற்றார்‌. மாநில துணைப்‌ பொதுச்‌ செயலாளர்‌ கமலநாதன்‌, மாவட்டச்செயலாளர்‌ சண்முகசுந்தரம்‌, மாநில துணைத்தலைவர்‌ கார்த்திகேயன்‌, மாவட்ட மகளிரணி செயலாளர்‌ கலைச்செல்வி, ஒன்றிய மகளிரணி செயலாளர்‌ சுமதி ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்‌. மாநில செயற்‌குழு உறுப்பினர்‌ கண்ணன்‌ ஆண்டறிக்கை வாசித்தார்‌.

மாநிலத்‌ தலைவர்‌ திரு.லட்சுமிபதி, மாநில பொருளாளர்‌ திரு தியாகராஜன்‌, கொள்ளிடம்‌ ஒன்றியகுழு தலைவர்‌ திரு.ஜெயபிரகாஷ்‌, திமுக ஒன்றிய செயலாளர்‌ திரு.ரவிக்‌குமார்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்‌.




மாநில பொதுச்செயலாளர் திரு.இரா.தாஸ்‌ அவர்கள் கலந்துகொண்டு இயக்க கொடியை ஏற்றி வைத்து பேசுகையில்‌, பழைய ஓய்வூதிய திட்‌டத்தை அமல்படுத்த வேண்டும்‌. காலியாக உள்ள அரசு ஊழியர்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ பணியிடங்களைஉடனடியாக நிரப்ப வேண்‌டும்‌. அவுட்சோர்ஸ்‌சிங்‌ முறையில்‌ ஆசிரியர்களையும்‌, அரசு ஊழியர்களையும்‌ பணி அமர்த்துவதை கைவிட வேண்டும்‌ என்று அரசை வலியுறுத்தி உரையாற்றினார். இறுதியாக ஒன்றிய பொருளாளர்‌ ரவி நன்றி கூறினார்‌.


Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...