நீடாமங்கலம் வட்டாரம் ஐம்பெரும் விழா
இன்று 01-05-24 காலை,10.30.மணி அளவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரத்தில் வடுவூரில் உள்ள லிட்டில் ஸ்டார் பள்ளியில் இயக்க நிறுவனர் பிறந்தநாள் விழா, பணிநிறைவு பாராட்டுவிழா, பரிசளிப்பு விழா என ஐம்பெரும் விழா சிறம்பாக நடை நடைபெற்றது.
விழாவிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.மாவட்ட பொருளாளர் மற்றும் வட்டார செயலாளர் ராஜா அனைவரையும் வரவேற்றார்கள்.
மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் கனகசபை, முன்னாள் வட்டார பொறுப்பாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர்.
இயக்க நிறுவனர் திருவுருவபடத்தை இயக்க பொதுச் செயலாளர் திறந்தும், பணிநிறைவு பெற்ற திரு.க.ராமதாஸ் அவர்களை பாராட்டியும், இயக்க மே தின எழுச்சியுரையும் ஆற்றினார்கள்.
உடன் மாநிலத் தலைவர் ஆ.இலட்சுமிபதி, மாநில பொருளாளர் பி.தியாகராஜன், மாநில மகளிரணி செயலாளர் செள.கிருஷ்ண குமாரி ஆகியோர் மே தின உரையும்,பாராட்டுரையும் வழங்கினர்.
வட்டாரப் பொருளாளர் எல்..பிராங்க்கிளின் நன்றி கூறினார்கள்.
Comments