நன்றி மறப்பது நன்றன்று இன்று 07-02-2022 மதியம் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மதிப்புமிகு பள்ளிக் கல்வி ஆணையாளர் அவர்களை சந்திக்க 3.30 மணி அளவில் அலுவலகம் சென்றோம், பார்வையாளர்கள் அறையில் அமர்ந்து இருந்தோம் சந்திக்கின்ற நேரம் நெருங்கும் வேளை, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு மதிப்புமிகு ஆணையாளர் அவர்கள் செல்லவேண்டிய நிலையில், கூட்டம் முடிந்து வரும் வரை காத்திருந்தோம். ஏழு மணி அளவில் ஆணையாளர் அவர்கள் மீண்டும் அலுவலகம் வருகை தந்தார்கள்.அச்சமயம் நேரில் சந்தித்த நிகழ்வு. 1.முதலில் LKG, UKG க்கு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய பணிநிலைக்கே மாறுதல் பெற தொடர்ந்து நாம் வலியுறுத்தியதின் அடிப்படையில்,மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், பள்ளிக் கல்வி ஆணையாளர் அவர்களின் அறிவுரத்தலின்படி மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் உரிய ஆணை வெளியிட்டதற்கு ஆணையாளர் அவர்களிடம் இடைநிலை ஆசிரியர்களின் கெளரவத்தை பாதுகாத்ததற்காக இயக்கத்தின் சார்பில் நமது பொதுச் செயலாளர் அவர்கள் நன்றியை தெரிவி...
2800 தர ஊதியத்தில் உள்ள சகோதர, சகோதரிகளே...... இதுவரை நொண்டச்சாக்கு சொல்லி நொண்டியடித்தது போதும்.. போராட்டக்களத்தில் தங்களின் பங்களிப்பு என்னவோ இதுநாள்வரை சொற்பமான அளவாகவே உள்ளது.. துளியும் பாதிப்பு இல்லாத மூத்த ஆசிரியர்களே பெருமளவில் களம் காண்கின்றனர். அழுதாலும் அவள் தான் பிள்ளை பெறவேண்டும் என்பதை மறந்தீர்களோ..? எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ளாமல் பயனை மட்டும் எதிர்பார்த்தால், அது எந்தவகையிலாவது பயனளிக்குமா.? அகல பாதாளத்தின் விளிம்பில் நிற்பதை நீ இன்னுமா உணரவில்லை..? தரம் தாழ்ந்து போன உன் தரஊதியத்தை இன்று நீ மீட்டெடுக்காவிடில் நாளை 7-வது ஊதியக்குழுவில் தரங்கெட்டுப்போய்விடுவாய்.. முடங்கிக் கிடந்தது போதும் முண்டியடித்து போராட்டக் களத்திற்கு வா..
நமது இயக்க நிறுவனரும், சமரசமற்ற போராளியுமான அண்ணன் மாவீரன் ச.அப்துல் மஜீத் அவர்களின் 8 ஆம் நினைவு நாளை ஒட்டி நமது பொதுச்செயலாளர் இரா.தாஸ் அவர்களின் புகழ் அஞ்சலி....
Comments