Posts

Showing posts from September, 2026

ஆசிரியர் தின விழா- 2026 இல்

Image
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர் தின வாழ்த்துகளை  தொடக்க கல்வி இயக்குநர் மதிப்பு மிகு முனைவர் பூ.ஆ.நரேஷ்‌..அவர்களை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் மாநில தலைவர் சு.இரமேஷ் அவர்கள் மாநில பொருளாளர் பி.தியாகராஜன் .. அவர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னை ,அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ,நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.இராஜ் மோகன் அவர்களை வரவேற்றக  இருந்து தருணத்தில். பாடநூல் கழக தலைவர் மாண்புமிகு லையோலா மணி அவர்களை சந்தித்து  ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவித்த மாநில TAAK பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள்  உடன் மாநில தலைவர் சு.இரமேஷ் மாநில பொருளாளர் பி.தியாகராஜன்‌ மற்றும் நிர்வாகிகள்.

ஆசிரியர் தின வாழ்த்து செய்தி

Image
*ஆசிரியர் தின விழா வாழ்த்து செய்தி*  ஆசிரியர் தின விழா   நன்னாளில் மேனாள் குடியரசு தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த மண்ணில் இருந்து ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.  *ஆசிரியர் பணி அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி* என்கின்ற மகத்தான பணியை செய்து வருகின்ற என் அன்பிற்கினிய இயக்க கண்மணியே .! *எழுத்து* **அறிவிப்பவன்* *இறைவன்* என்கின்ற உன்னதமான சேவை ஆற்றிவரும் என் ஆசிரிய பெருமக்களே பல்துறைகள் இருந்தாலும்  ஆசிரியர் துறை ஒரு வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்   பெறும் துறை. மனித வளத்தின் மகத்துவத்தை உலகின் உயர்ந்த இடத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கும்.தன்னல மற்ற ஆசிரியர்கள் .. இத்தகைய துறையில் நாம் செதுக்கும்...  களப் பணிகள்.. தான் ....  தலைமை பண்புமிகுந்த நாட்டின்  *தலைவர்களையும்* நல்ல எண்ணங்களும் உண்மையை உணர்த்துகின்ற மனித வாழ்வியல் நெறிமுறைகளையும் தன் நம்பிக்கையை  வெற்றி, தோல்வியை சம அளவுகோலாக எண்ணுகிற மன உறுதியை மாணவர்களுக்கு  கல்வி எனும்  நல் விதை விதைத்து சிறுகளைகளை அவ்வப்போது ...