Posts

மாநில மையம் அறிக்கை...

Image
நேற்று 29-04-24 திருவண்ணாமலை மாவட்டம் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் அடிப்படையில் கீழ்பென்னாத்தூர் வட்டாரம்,வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களின் நடவடிக்கை பற்றியும் அதனால் ஆசிரியர்கள் மத்தியல் ஏற்பட்ட அச்சத்தை பற்றியும் சி.அ.முருகன் பொதுச்செயலாளர் கவணத்திற்கு கொண்டு வந்தார்கள். நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில்  TET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யும்படி மா.கல்வி அலுவலரின் நடவடிக்கை பற்றி பொதுச்செயலாளர் கவணத்திற்கு வந்ததும், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் பொதுச் செயலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதின் அடிப்படையில் கீழ்கண்ட விளக்கம் அளிக்கப் படுகிறது. பதவி உயர்வு வழங்குவதில் TET தேர்ச்சி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது, அதற்காக TET தேர்ச்சி பெற்று நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள், மற்றும் பணிமூப்பு பட்டியல் படி பதவி உயர்வுக்கு தகுதி  வாய்ந்தவர்கள் பட்டியல் நீதிமன்ற வழக்குக்காக தேவைப்படுகிறது அதற்காக பட்டியல் கேட்டுள்ளோம் ஆசிரிய...

பண்ருட்டி வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் வாழ்த்துரை...

Image
  கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டார பணிநிறைவு பாராட்டு விழாவில் பொதுச்செயலாளர் திரு.இரா.தாஸ் அவர்கள்... இயக்கப்பேருரை நிகழ்த்திய போது... விழாவில் மாநிலத்தலைவர் திரு. ஆ.இலட்சுமிபதி அவர்கள் ,மாநிலப் பொருளாளர் திரு. பி.தியாகராசன் அவர்கள், மாநில மகளிரணிச் செயளாலர் திருமதி. சௌ.கிருஷ்ணகுமாரி அவர்கள் ,மாநில தணிக்கைச் செயலாளர் திரு. மு.கங்காதரன் அவர்கள் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

  இணைய செய்தி பாலக்கோடு: அண்ணா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. 

விழுப்புரம் பணி நிறைவு பாராட்டு விழா காணொளிகள்...

Image
 

வாணியம்பாடி வட்டார பணி நிறைவு பாராட்டு விழா.... பொதுச்செயலாளர் சிறப்புரை

Image
  வாணியம்பாடியில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடைபெற்ற பணி நிறைவு செய்யும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் நமது பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

கீழ்பென்னாத்தூர் வட்டார பணி நிறைவு பாராட்டு விழா - பொதுச்செயலாளர் பங்கேற்பு

Image
  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கீழ்பென்னாத்தூர் வட்டாரக் கிளை சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது  நிகழ்வில் மாநிலத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பங்கேற்று ஓய்வு பெறும் ஆசிரியப் பெருமக்களை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினர்.

மதுராந்தகம் வட்டாரம் பணி நிறைவு பாராட்டு விழா... பொதுச்செயலாளர் பாராட்டுரை

Image
 தற்போது (27-04-2024) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டாரம் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. வட்டாரத் தலைவர் திரு.ஆ.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர் திரு.சு.மணிமோகன் அவர்கள் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெறுகிறது. விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் திரு.மு.பரமானந்தம் அவர்கள் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் திரு ஏகாம்பரம் திரு. பெ.கொம்பையா மற்றும் பல்வேறு மாநில,வட்டார பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். நமது மாநில பொதுச்செயலர் அவர்கள் பணி நிறைவு செய்யும் விழா நாயகர் திரு.க.வேதாசலம் அவர்களை பாராட்டி அவர் மதுராந்தகம் கிளை ஆரம்பிக்க காட்டிய முனைப்பு, அவரின் இயக்கப் பணி ஆகியவற்றை பாராட்டி பழைய ஓய்வூதியம், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு,ஏழை மக்கள் பயன்பெறும் அரசுப்பள்ளி பணியிடங்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்து பேசினார் .  தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது. விழா குறித்து காட்சி ஊடகங்களில் செய்தி: புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி தமிழன் தொ...