மதுராந்தகம் வட்டாரம் பணி நிறைவு பாராட்டு விழா... பொதுச்செயலாளர் பாராட்டுரை
தற்போது (27-04-2024) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டாரம் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
வட்டாரத் தலைவர் திரு.ஆ.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர் திரு.சு.மணிமோகன் அவர்கள் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெறுகிறது.
விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் திரு.மு.பரமானந்தம் அவர்கள் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் திரு ஏகாம்பரம் திரு. பெ.கொம்பையா மற்றும் பல்வேறு மாநில,வட்டார பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
நமது மாநில பொதுச்செயலர் அவர்கள் பணி நிறைவு செய்யும் விழா நாயகர் திரு.க.வேதாசலம் அவர்களை பாராட்டி அவர் மதுராந்தகம் கிளை ஆரம்பிக்க காட்டிய முனைப்பு, அவரின் இயக்கப் பணி ஆகியவற்றை பாராட்டி பழைய ஓய்வூதியம், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு,ஏழை மக்கள் பயன்பெறும் அரசுப்பள்ளி பணியிடங்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்து பேசினார் .
தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.
விழா குறித்து காட்சி ஊடகங்களில் செய்தி:
Comments