நெமிலி வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்பு
TAAK பணிநிறைவு பாராட்டு விழா : இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டார பணிநிறைவு பாராட்டு விழா இன்று மாலை பனப்பாக்கம் ஊ.ஒ.தொ.பள்ளியில் வட்டாரத் தலைவர் திரு.சு.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைமை நிலையச் செயலாளரும் மாவட்டச் செயலாளருமான திரு.பா.பாலமுருகன் அவர்கள் கலந்துக் கொண்டு நினைவுப்பரிசு வழங்கி, இயக்கபேருரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் திரு.அ.பிரகாசம், மாவட்ட ஓய்வு பிரிவு செயலாளர் திரு.இரா.அருள்ஜோதி, காவேரிப்பாக்கம் வட்டாரத் தலைவர் திரு.மோ.பாஸ்கரன் மற்றும் மேனாள் ஓய்வு பிரிவு செயலாளர் திரு.பா.உத்தமன் உள்ளிட்ட மாவட்ட, வட்டார நிர்வாகிகள் சிறப்புரைஆற்றினார்கள். வட்டாரச் செயலாளர் திரு.இரா.விநாயகம் அனைவரையும் வரவேற்றார். வட்டார பொருளாளர் திரு.நா.சுப்பிரமணி நன்றியுரை ஆற்றினார். விழாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
Comments