தேர்தல் பணி குறித்து நமது பொதுச்செயலாளர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை


 திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் பிரபுசங்கர் அவர்களை ஜாக்டோ ஜியோ சார்பாகவும் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் அவர்கள் மற்றும் ஜாக்டோஜியோ உயர் மட்ட குழு உறுப்பினர் கள் ஞானசேகரன் மற்றும் பிரபாகரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஜாக்டோஜியோ உயர் மட்ட குழு உறுப்பினர் முரளி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து தேர்தல் பணி யில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் அரசு ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்  கோரிக்கையை கனிவாக பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் சென்னை மாவட்டத்திற்கு சென்றுவிட்ட அம்பத்தூர் மற்றும் மாதவரம்.திருவெற்றியூர்

 பகுதிகளுக்கும் தேர்தல் அலுவலராக நமது மாவட்ட ஆட்சியர் இருப்பதால் அப்பகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து ஊழியர்கள் ஆசிரியர்களும் இந்த முறை தேர்தல் பணியை சிறப்பாக நடத்தித் தருமாறு மாவட்ட ஆட்சியர் நம்மிடம் தெரிவித்தார்

 ஜாக்டோ ஜியோ சார்பாக பெண் ஆசிரியர் மற்றும் ஊழியர்களை அருகாமையில் இருக்கக்கூடிய தொகுதியில் உள்ள வாக்கு சாவடியில் பணிநியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது அதை பரிசீலித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் நம் வாக்குசாவடி கள் எண்ணிக்கை ஏற்ப ஊழியர்கள் இல்லை இருப்பினும் அவ்வாறு வெகு தொலைவில் ஊழியர்கள் உரிய  காரணம் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்கும் பட்சத்தில் அருகில் உள்ளவாக்குச்சாவடியில் பணி அமர்த்தப்படுவார்கள் என்பதை உறுதி அளித்துள்ளார் மேலும் *திருவள்ளூரில் இருந்து தேர்தல் பயிற்சிக்கு கலந்து கொள்வதற்கு ஏதுவாக போதிய பேருந்துகளை ஆங்காங்கே இயக்குவதற்கும் தேர்தல் நாளன்று இரவு நேரங்களில் வீடு திரும்பக் கூடிய ஊழியர்களுக்கு போதிய பேருந்து வசதி வாகனம் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் கள் உடனே அதனை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்  மேலும் பயிற்சி வகுப்பு நடக்கும் இடத்தில் போதிய குடிநீர் வசதி கழிப்பிட வசதிகள் வேண்டும் மேலும் உணவு ஏற்பாடுகள் உரிய வகையில் ஏற்படுத்தி தரவேண்டும் என்று ம் மேலும் மாற்றுத்திறனாளிகள் கற்பிணி ஊழியர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தேர்தல் பணி தவிர்ப்பு  வேண்டும் .

தேர்தல் பணி யில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு நூறு விழுக்காடு பயிற்சி மையம் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.  தேர்தல் அலுவலர்கள். P.O...

P1 அவர்கள் பணி நிலைக்கு பதவி நிலைஏற்ப வழங்கி ட வேண்டும் BLOபணியில் உள்ள வர்களுக்கு இரண்டு ஆணைகள் வந்துள்ளது நீக்க வேண்டும் 

என்று கோரிக்கை வைத்தார் கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள்  துரித நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் கள் என்று செய்தி யாளரிடம் ஜாக் டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் அவர்கள் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...