Posts

பள்ளிக்கல்வி இயக்குனருடன் பொதுச் செயலாளர் சந்திப்பு...

Image
 மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கம். 25.05.2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வை இரத்து செய்ய பொதுச்செயலர் கோரிக்கை....

Image
மதிப்பு மிகுந்த தொடக்கக்கல்வி இயக்குநர் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் TAAKபொதுச் செயலாளர் இரா.தாஸ்.  அவர்களிடம் தற்போது நடைபெற உள்ள ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையை டிட்டோஜாக் சார்பில் வைத்தார்.

நீடாமங்கலம் வட்டாரம் ஐம்பெரும் விழா

Image
  இன்று 01-05-24 காலை,10.30.மணி அளவில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரத்தில் வடுவூரில் உள்ள லிட்டில் ஸ்டார் பள்ளியில் இயக்க நிறுவனர் பிறந்தநாள் விழா, பணிநிறைவு பாராட்டுவிழா, பரிசளிப்பு விழா என ஐம்பெரும் விழா சிறம்பாக நடை நடைபெற்றது. விழாவிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.மாவட்ட பொருளாளர் மற்றும் வட்டார செயலாளர் ராஜா அனைவரையும் வரவேற்றார்கள். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் கனகசபை, முன்னாள் வட்டார பொறுப்பாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். இயக்க நிறுவனர் திருவுருவபடத்தை இயக்க பொதுச் செயலாளர் திறந்தும், பணிநிறைவு பெற்ற திரு.க.ராமதாஸ் அவர்களை பாராட்டியும்,  இயக்க மே தின எழுச்சியுரையும் ஆற்றினார்கள். உடன் மாநிலத் தலைவர் ஆ.இலட்சுமிபதி, மாநில பொருளாளர் பி.தியாகராஜன், மாநில மகளிரணி செயலாளர் செள.கிருஷ்ண குமாரி ஆகியோர் மே தின உரையும்,பாராட்டுரையும் வழங்கினர். வட்டாரப் பொருளாளர் எல்..பிராங்க்கிளின் நன்றி கூறினார்கள்.

மாநில மையம் அறிக்கை...

Image
நேற்று 29-04-24 திருவண்ணாமலை மாவட்டம் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் அடிப்படையில் கீழ்பென்னாத்தூர் வட்டாரம்,வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களின் நடவடிக்கை பற்றியும் அதனால் ஆசிரியர்கள் மத்தியல் ஏற்பட்ட அச்சத்தை பற்றியும் சி.அ.முருகன் பொதுச்செயலாளர் கவணத்திற்கு கொண்டு வந்தார்கள். நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில்  TET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யும்படி மா.கல்வி அலுவலரின் நடவடிக்கை பற்றி பொதுச்செயலாளர் கவணத்திற்கு வந்ததும், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் பொதுச் செயலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதின் அடிப்படையில் கீழ்கண்ட விளக்கம் அளிக்கப் படுகிறது. பதவி உயர்வு வழங்குவதில் TET தேர்ச்சி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது, அதற்காக TET தேர்ச்சி பெற்று நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள், மற்றும் பணிமூப்பு பட்டியல் படி பதவி உயர்வுக்கு தகுதி  வாய்ந்தவர்கள் பட்டியல் நீதிமன்ற வழக்குக்காக தேவைப்படுகிறது அதற்காக பட்டியல் கேட்டுள்ளோம் ஆசிரிய...

பண்ருட்டி வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் வாழ்த்துரை...

Image
  கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டார பணிநிறைவு பாராட்டு விழாவில் பொதுச்செயலாளர் திரு.இரா.தாஸ் அவர்கள்... இயக்கப்பேருரை நிகழ்த்திய போது... விழாவில் மாநிலத்தலைவர் திரு. ஆ.இலட்சுமிபதி அவர்கள் ,மாநிலப் பொருளாளர் திரு. பி.தியாகராசன் அவர்கள், மாநில மகளிரணிச் செயளாலர் திருமதி. சௌ.கிருஷ்ணகுமாரி அவர்கள் ,மாநில தணிக்கைச் செயலாளர் திரு. மு.கங்காதரன் அவர்கள் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

  இணைய செய்தி பாலக்கோடு: அண்ணா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. 

விழுப்புரம் பணி நிறைவு பாராட்டு விழா காணொளிகள்...

Image