இன்றைய தேர்வு முறை - ஜெ .ஜெயதுரை
ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு படம் சொல்லிவிடும்!
“வள்ளுவரும் மாணவராய் ஆனார். திருக்குறளில் தேர்வெழுதப் போனார் முடிவு வெளியாச்சு...அந்தோ ஃபெயிலாச்சு…பாவம் அவர் படிக்கவில்லை கோனார்-நோட்ஸ் “இது லிமரிக் வடிவத்தில் குறும்பாக எழுதப்பட்ட ஒரு குறும்பா. நகைச்சுவையாக இருந்தாலும் இன்றைய கல்விச் சூழலின் நிலையைக் காட்டுகிறது.
நம்முடைய படைப்பாற்றல், புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை எல்லாம் பரிசோதிப்பதை விட மனப்பாடத்திறன் மற்றும் ஒரு விஷயத்தின் சுருக்கமான முக்கிய வார்த்தைகளைத் (key words) தெரிந்து கொள்ளுதல் போன்றவற்றைத்தான் பரிசோதிக்கிறது. இச்சூழலில் நம்கல்வி முறைக்கு என்ன தெரிந்திருக்கிறது என்பதைவிட முக்கியம், நாம் அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது .
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு ஆசிரியர் ஒரு நாளுக்குச் சுமார் ஐம்பது விடைத்தாள்கள் வரை திருத்த வேண்டியிருக்கும். மொத்தம் எட்டு மணிநேரம் என்றால் கூட ஒரு விடைத்தாளுக்கு பத்து நிமிடங்களுக்கு மேல் எடுக்க முடியாது. இதில் மதிப்பெண்களைக் கூட்டுவது, அதற்குரிய படிவங்களில் எழுதுவது என்று அதிலேயே சில நிமிடங்கள் சென்றுவிடும்.
பல மாதங்களாக ஒரு மாணவன் இரவுபகலாகக் கண்விழித்துப் படிக்கும் ஒரு பாடத்தைச் சிலநிமிடங்களே படிக்கப் போகும் ஒருவரை நாம் கவரவேண்டும் என்பதே இதிலுள்ள சேதி. இது முகத்தையே பார்க்காமல் நேர்முகத் தேர்வு நடத்துவது போன்றதாகும்.
உளவியல் ரீதியாகச் சொல்லவேண்டுமானால் முதல் பார்வையிலேயே நாம் பல விஷயங்களைப் பற்றிய நமது கண்ணோட்டத்தை அடைகிறோம். மகத்தான இலக்கியப் படைப்புகள் பல, முதல் வரிகளிலேயே நம்மைச் சுண்டியிழுத்து உள்ளே தள்ளுபவை. அதுபோல் விடைத்தாள்களைத் திருத்தும் போதும் முதல் ஓரிரு பதில்களிலேயே நம்முடைய அறிவுத்திறனைப் பற்றிய ஒரு அபிப்பிராயம் ஏற்பட்டுவிடுகிறது. ஆகவே முதல் பதிவை அழுத்தமாகச் செய்யுங்கள்.
மேலும் ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு படம் சொல்லிவிடும். முகநூலில் பார்த்தோமே யானால் அருமையான சில நிலைத்தகவல்களை விட கவர்ச்சியான படங்கள் அதிகம் பேரால் பார்க்கப்பட்டிருக்கும். எனவே கூடுமானவரை கற்றவற்றைக் காட்சிப்படுத்துங்கள். அதே போல் எல்லா விஷயங்களுக்கும் சாராம்சம் என்று ஒன்று இருக்கும். அந்த அடிநாதத்தைப் பளிச்சென்று கண்ணைக் கவரும் வண்ணம் எழுதிட வேண்டும். நம்முடைய குறைகள் அந்த வெளிச்சத்தில்ஒளிந்து கொள்ளும். வெற்றிகரமான பல பொருட்களின் விளம்பரங்களின் பின்னால் உள்ள யுக்தி இதுதான். நன்கு படித்திருந்தும் அதைப் பிறருக்குப் புரியும் வகையில் நன்றாக விளக்கத் தெரியாதவர்கள் மலர்ந்திருந்தும் மணம் இல்லாத பூக்களைப் போன்றவர்கள் என்கிறது
‘இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்’ என்ற குறள். மனமிருந்தால் மணம் உண்
Comments