இடைநிலை ஆசிரியர்களை கடைநிலை ஊழியர்களாக்காதே

2800 தர ஊதியத்தில் உள்ள சகோதர, சகோதரிகளே......
இதுவரை நொண்டச்சாக்கு சொல்லி நொண்டியடித்தது போதும்..

போராட்டக்களத்தில் தங்களின் பங்களிப்பு என்னவோ இதுநாள்வரை சொற்பமான அளவாகவே உள்ளது..
துளியும் பாதிப்பு இல்லாத மூத்த ஆசிரியர்களே பெருமளவில் களம் காண்கின்றனர்.

அழுதாலும் அவள் தான் பிள்ளை பெறவேண்டும் என்பதை மறந்தீர்களோ..?

எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ளாமல் பயனை மட்டும் எதிர்பார்த்தால்,
அது எந்தவகையிலாவது பயனளிக்குமா.?

அகல பாதாளத்தின் விளிம்பில் நிற்பதை நீ இன்னுமா உணரவில்லை..?

தரம் தாழ்ந்து போன உன் தரஊதியத்தை இன்று நீ மீட்டெடுக்காவிடில் நாளை 7-வது ஊதியக்குழுவில் தரங்கெட்டுப்போய்விடுவாய்..

முடங்கிக் கிடந்தது போதும் முண்டியடித்து போராட்டக் களத்திற்கு வா..

Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...