டிட்டோஜாக் வேலூர் மாவட்ட ஆயத்த கூட்டம்

வருகின்ற  6-ந்தேதி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்த தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் (டிட்டோஜேக்) வேலூர் ஆசிரியர் இல்லத்தில் மாநில உயர்மட்ட பொதுக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொருளாளருமாகிய அமிர்தலிங்கம் தலைமையில் நடந்தது.

மாநில டிட்டோஜேக் உயர்மட்ட குழுவின் முடிவின் படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 22 ஒன்றியங்களிலும் உள்ள டிட்டோஜேக் அமைப்புடன் இணைந்துள்ள 6 சங்கங்களை சேர்ந்த ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் வருகிற 6–ந்தேதி அன்று நடைபெறும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க செல்வது
6–ந்தேதி காலை 11 மணி அளவில் தங்கள் சார்ந்த தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது,
அன்று 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில்  வேலூர் மாவட்டத்தில் உள்ள 9 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பது,
பள்ளியில் பணிபுரியம் அனைத்து ஆசிரியர்களும் வேலை நிறுத்தம் செய்யும் போது தலைமை ஆசிரியர் பள்ளியின் பொறுப்பை முதல் நாள் அன்றே அவர்கள் சார்ந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்களிடம் ஒப்படைத்தல் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர், கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி,
தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகிய 6 சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...