Posts

Showing posts from July, 2024

டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

Image
டிட்டோஜாக் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ள நிலையில் டிட்டோஜாக் ஒருங்கிணைப் பாளர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

போராட்ட களத்தில் நமது பொதுச்செயலாளர்....

Image
இன்று முதல் தொடங்கி உள்ள DPI வளாக முற்றுகைப்போராட்டத்தின் முதல் நாளில் சூறாவளியாக சுழன்று ஆசிரியர்கள் நெஞ்சில் உள்ள கனலை அரசு உணரும் வகையில் பல்வேறு மண்டபங்களில் கைது செய்து அடைக்கப்பட்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்து புரட்சி உரை ஆற்றினார் நமது ஆசிரியப் பேரினத்தின் பாதுகாவலர் மதிப்புமிகு இரா. தாஸ் அவர்கள்..... தேனாம்பேட்டை சமுதாய கூடத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் பொதுச்செயலாளர் திரு.தாஸ் அவர்கள் எழுச்சி உரை  ஆற்றிய போது.. கோடம்பாக்கம் அஞ்சுகம் திருமண மண்டபத்தில் நமது பொதுச்செயலாளர் அவரகள் எழுச்சி உரை நிகழ்த்தினார்...

பொதுச் செயலாளரின் மடல்

அன்பிற்கினிய இயக்ககண்மணியே வணக்கம் வீரஞ்செறிந்த டிட்டோஜாக் டி.பி.ஐ. முற்றுகை போராட்டம் முதல் நாள் போராட்ட களம் காண(.29.7.2024) தொடக்க கல்வி இயக்க ஆசிரியர்களின் உரிமையை நிலை நாட்டும் போராட்டம் ஆரம்ப கல்வி ஆசிரியர் இன அழிவு காத்திட....நிச்சயம் அரசாணை 243 ரத்து செய்து வரலாறு படைத்திட புறப்படு தோழா. இடைநிலை ஆசிரியர் ஊதிய அநீதி மீட்டெடுக்க புறப்பட்டு வா. உயர் கல்வி ஊக்கத்தொகை பெற்றிட  பழைய பென்ஷன் ஈட்டிய விடுப்பு மீட்டெடுக்க    கூட்டு போராட்டம் பதாகையை பற்றி யே  நம் இயக்க வலிமை உணர்வுகள் வெளிபடுத்த புறப்படு... புறமுதுகிட்டு முடங்கி எதிர் விணையாற்றும் கோழைகளை அடையாளம் காட்டும் போராட்டம். ஆசிரியர் இனத்தின் சமூக உயர்வு பெற்று தந்த போராட போர் குணம் நமக்கு கற்றுத் தந்த  மாவீரர் அப்துல் மஜீத் கண்டெடுத்த  போர் படை தளபதி களே வங்கக்கடல் அருகே  சென்னை பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தை நோக்கி ஓடோடி வா.. தொடக்க  கல்வித்துறை.. அரசாணை 101 ரத்து செய்து அரசாணை 151 பெற்று தந்த கூட்டம் நம் கூட்டம் ... பாதுகாப்புடன் பயணம் இருக்கட்டும். கட்டுப்பாடுகளுடன்  போராட்டம் களத...

பள்ளிக்கல்வி செயலருடன் டிட்டோஜாக் பேச்சு

Image
இன்று மாநில டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களை சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர்  திருமதி மதுமதி  IAS அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பள்ளிக்கல்வி செயலாளர் அவர்களிடம் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர்  மற்றும்  ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ் அவர்கள்  புத்தகம் மற்றும் இயக்கத்தின்  "கூட்டணி ஆசிரியர் இதழ்" அளித்தார். முதன்மை செயலாளர் அவர்கள் கூட்டணி ஆசிரியர் இதழ் சிறப்பு என்று பாராட்டுக்கள் தெரிவித்தார். இந்த பேச்சு வார்த்தையில் பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ்.அவர்கள் உடனிருந்தனர். .

பொதுச்செயலாளர் - முதல்வர் சந்திப்பு

Image
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை,  உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யும் நிகழ்வில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் அவர்கள் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்....... ---நன்றி..."தமிழ் முரசு" இன்றைய (17.7.2025)

தொடக்கக்கல்வி இயக்குனர் பூ ஆ நரேஷ் அவர்களுக்கு பொதுச்செயலாளர் வாழ்த்து....

Image
தொடக்கக்கல்வி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்ற மதிப்புமிகு பூ.ஆ. நரேஷ் அவர்களை, நமது பொதுச்செயலாளர் திரு. இரா.தாஸ் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.  மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். நமது ஆசிரியர்கள் அரசாணை 243 ஆல் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும், கிராமப்புற வட்டாரப் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் மாற்றம் பெற்றுள்ளதால் கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வி பாதிப்புக்கு உள்ளாகும் நிலையை நமது பொதுச்செயலாளர் அவர்கள் இயக்குநருக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.

பள்ளிக்கல்வி செயலருடன் பொதுச்செயலாளர் சந்திப்பு

Image
திருவள்ளூரில்15.7.2024 கீழச்சேரிக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் வருகை புரிந்து காலை சிற்றுண்டியை உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தி.... தொடங்கி வைத்தார் இந்த விழாவிற்கு பள்ளிக் கல்வி துறை செயலாளர்.மதிப்புமிகு குமரகுருபரன் இ ஆ ப, அவர்களை பொதுச் செயலாளர் & ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் & டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ் அவர்கள் சந்தித்து பேசினார். இது குறித்து அவரிடம் பேட்டி கண்டபோது அவர் கூறியதாவது.... எங்கள் பகுதி க்கு வருகை புரிந்து உள்ளீர்கள்..வரவேற்கிறோம் என்றேன் புன்னகை புரிந்து கொண்டு என்னிடம் பேசினார். குறிப்பாக ஆசிரியர்களின் கோரிக்கை அரசாணை 243 ரத்து வேண்டும் என்று மீண்டும் கேட்டேன் அதற்கு அவர் கும்மிடிப்பூண்டி இருந்து குமரி வரை செல்ல சொல்லிட்டாங்க என்று பேசியதை பார்த்தேன் என்றார். அதற்கு நான் ஆசிரியர்கள் பாதிப்பு அதிகம் என்றேன்.  விரைவில் அரசாணை யில் புதிய திருத்தங்கள் வெளிவரும் என்றார்.  ஆனால் அரசாணை ரத்து செய்வது  குறித்து எந்த சாதகமான பதில் இல்லை என அறிய முடிந்தது.மேலும்  தலைமை ஆசிரியர் பதவி உயர்வு குறித்து பேச...