பொதுச் செயலாளரின் மடல்


அன்பிற்கினிய இயக்ககண்மணியே வணக்கம் வீரஞ்செறிந்த டிட்டோஜாக் டி.பி.ஐ. முற்றுகை போராட்டம்
முதல் நாள் போராட்ட களம் காண(.29.7.2024)
தொடக்க கல்வி இயக்க ஆசிரியர்களின் உரிமையை நிலை நாட்டும் போராட்டம்
ஆரம்ப கல்வி ஆசிரியர் இன அழிவு காத்திட....நிச்சயம் அரசாணை 243 ரத்து செய்து வரலாறு படைத்திட புறப்படு தோழா.
இடைநிலை ஆசிரியர் ஊதிய அநீதி மீட்டெடுக்க
புறப்பட்டு வா.
உயர் கல்வி ஊக்கத்தொகை
பெற்றிட 
பழைய பென்ஷன்
ஈட்டிய விடுப்பு மீட்டெடுக்க
 
 கூட்டு போராட்டம் பதாகையை பற்றி யே 
நம் இயக்க வலிமை உணர்வுகள் வெளிபடுத்த புறப்படு...
புறமுதுகிட்டு முடங்கி எதிர் விணையாற்றும் கோழைகளை அடையாளம் காட்டும் போராட்டம்.
ஆசிரியர் இனத்தின் சமூக உயர்வு பெற்று தந்த போராட போர் குணம் நமக்கு கற்றுத் தந்த 
மாவீரர் அப்துல் மஜீத்
கண்டெடுத்த 
போர் படை தளபதி களே
வங்கக்கடல் அருகே
 சென்னை
பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தை நோக்கி ஓடோடி வா..
தொடக்க 
கல்வித்துறை..
அரசாணை 101 ரத்து செய்து அரசாணை 151 பெற்று தந்த கூட்டம் நம் கூட்டம் ...
பாதுகாப்புடன் பயணம் இருக்கட்டும்.
கட்டுப்பாடுகளுடன் 
போராட்டம் களத்தில் இருக்கவேண்டும்...

கோரிக்கை 
ஒன்றே
மனதில் உறுதி கொண்டு
புறப்பட்டு வா...
கோரிக்கை வெல்லட்டும்...
ஒன்றுபட்டு போராடுவோம்.
வெற்றி.நமதே
அன்புடன் 
இரா.தாஸ்
பொதுச் செயலாளர் 
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர்

Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...