சிறப்பு TET மற்றும் பாட வேளை சார்ந்து பொதுச்செயலாளர் அவர்கள் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களுடனான சந்திப்பு
*TAAK*
*செய்திகள்*
அன்பிற்கினிய இயக்க கண்மணியே....
மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குநர் *முனைவர் பூ.ஆ .நரேஷ்* அவர்களை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
மாநிலம் பொதுச் செயலாளர் *இரா.தாஸ்* அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து தொடக்க கல்வி துறையில் தொடக்க நிலையில் உள்ள மாணவர்கள் *விளையாட்டு பாடவேளை* மதிய உணவுக்கு அடுத்து பாடவேளையாக இருந்த நிலையில்.
மாநில பொதுச்செயலாளர் *இரா. தாஸ்* அவர்கள் தொடக்க கல்வி இயக்குனர் *முனைவர் பூ.ஆ.நரேஷ்*
*மாண்புமிகு* *பள்ளிக்கல்வித்துறை* *அமைச்சர்*
*ராஜ்மோகன்* அவர்களுக்கு கோரிக்கை வைத்தார் .
மேலும் *பாடநூல் கழக தலைவர் லயோலா மணி* அவர்களின் சிறப்பு கவனத்திற்கு மாநில பொதுச் செயலாளர் *இரா.தாஸ்*
அவர்கள் கோரிக்கை வலியுறுத்தி பேசினார் இந்நிலையில் விளையாட்டு
பாடவேளை
கடைசி பாட வேளை (நான்காம் பாடவேளையாக)
நடைபெற நடவடிக்கை எடுத்ததற்கு
*நன்றியை மாநில* *பொதுச் செயலாளர்* *இரா.தாஸ் அவர்கள்*
*தெரிவித்தார்*.
**""***********************
2). *ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு* (டெட் தேர்வு )விண்ணப்பம் செய்ய
பணிச் சான்றிதழ்
புதிதாக பெற வேண்டும் என்று CEO....DEO...BEO அலுவலர்கள்
கேட்பதாக TAAK
பொதுச்செயலாளர் கவனத்திற்கு இயக்க நிர்வாகிகளால்
கொண்டுவரப்பட்டது .
உடனடியாக
மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குநர் *முனைவர் பூ.ஆ.நரேஷ்* அவர்களை தொடர்பு கொண்டு
பொது செயலாளர் அவர்கள் மேற்படி கோரிக்கை வைத்தார்.
உடனடியாக *மாவட்ட கல்வி அலுவலர்கள்* கானொளிகூட்டத்தில் *தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ்* அவர்கள்
பணிச் சான்றிதழ் தர வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவுறுத்தினார்
இதனை *பொதுச்செயலாளர் *TAAKவாட்ஸ் ஆப்* ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் *விழுப்புரத்தில் முதன்மை கல்வி அலுவலர்* கேட்பதாகவும் ஒரு தகவலை மாவட்ட செயலாளர் பதிவு செய்து இருந்தார் .
உடனடியாக பொதுச் செயலாளர்
* 3.11.2026
* தொடக்கக் கல்வி இயக்குநர்
*முனைவர் பூ. ஆ.நரேஷ்*. அவர்களை தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்தில்
சந்தித்து கோரிக்கை விடுத்தார் .
மாநில பொதுச் செயலாளர் *இரா.தாஸ் அவர்கள்*.
உடனடியாக மதிப்பு மிகு தொடக்க கல்வி இயக்குநர் *முனைவர் பூ.ஆ.நரேஷ்* அவர்கள் *விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்* அவர்களை உடனடியாக தொலைபேசியில் அழைத்து ஆணையிட்டார் .
மேலும் *திருவாரூர் /தஞ்சாவூர் மாவட்டம்* முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொலைபேசியில் அழைத்து அறிவுறுத்தினார் .
உடனடியாக உரிய மாவட்டங்களை சார்ந்த CEO .DEO.. தொடர்பு கொண்டு ஆணையிட்ட
*தொடக்க கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ்* அவர்களுக்கு நம் பேரியக்கம் சார்பில்
*மாநில பொதுச் செயலாளர் *இரா.தாஸ்* . அவர்கள் நன்றி தெரிவித்தார்.
*ஆசிரியர் சிறப்பு டெட் தேர்வு*
ஆசிரியருக்கான சிறப்பு தகுதித் தேர்வு குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம்
மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் கேட்ட பொழுது
*சிறப்பு டெட் தேர்வு முதல் தாள்* எழுதினாலே தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வில்/பணிஉறுதி செய்ய படுகிறது* *இடைநிலை ஆசிரியர்கள் மட்டும்*
*"""**""""**************
*சிறப்பு டெட் இரண்டாம் தாள்*
பட்டதாரி ஆசிரியர்கள்
சிறப்பு டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் போதும்.
என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..
*குறிப்பாக* பட்டதாரி ஆசிரியர்
*சிறப்பு டெட்..தாள் ஒன்று* எழுத தேவையில்லை.
அதேபோன்று தான் இடைநிலை ஆசிரியர்கள்
*சிறப்பு டெட் தாள் இரண்டு* *எழுதவேண்டிய அவசியம் இல்லை*
அன்புடன்
*இரா.தாஸ்*
பொதுச் செயலாளர்
Comments