பள்ளிக்கல்வி செயலருடன் பொதுச்செயலாளர் சந்திப்பு

திருவள்ளூரில்15.7.2024 கீழச்சேரிக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் வருகை புரிந்து காலை சிற்றுண்டியை உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தி.... தொடங்கி வைத்தார் இந்த விழாவிற்கு பள்ளிக் கல்வி துறை செயலாளர்.மதிப்புமிகு குமரகுருபரன் இ ஆ ப, அவர்களை பொதுச் செயலாளர் & ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் & டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ் அவர்கள் சந்தித்து பேசினார்.
இது குறித்து அவரிடம் பேட்டி கண்டபோது அவர் கூறியதாவது....

எங்கள் பகுதி க்கு வருகை புரிந்து உள்ளீர்கள்..வரவேற்கிறோம் என்றேன் புன்னகை புரிந்து கொண்டு என்னிடம் பேசினார்.
குறிப்பாக ஆசிரியர்களின் கோரிக்கை அரசாணை 243 ரத்து வேண்டும் என்று மீண்டும் கேட்டேன் அதற்கு அவர் கும்மிடிப்பூண்டி இருந்து குமரி வரை செல்ல சொல்லிட்டாங்க என்று பேசியதை பார்த்தேன் என்றார்.

அதற்கு நான் ஆசிரியர்கள் பாதிப்பு அதிகம் என்றேன். 
விரைவில் அரசாணை யில் புதிய திருத்தங்கள் வெளிவரும் என்றார்.
 ஆனால் அரசாணை ரத்து செய்வது  குறித்து எந்த சாதகமான பதில் இல்லை என அறிய முடிந்தது.மேலும்
 தலைமை ஆசிரியர் பதவி உயர்வு குறித்து பேசிய போது.நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலைகளை  பேசினார்.   அருகில் இல்லம் தேடி கல்வி & நூலகத் துறை இயக்குநர் இளம்பகவத்.IAS அவர்கள் இருந்தார், என தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...