Posts

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு... மாவட்ட ஆயத்த மாநாடு

Image
  ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு... மாவட்ட ஆயத்த மாநாடு. மதுரையில் 08-01-2023 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி 19-02-2023 அன்று மாவட்ட தலைநகரங்களில் வாழ்வாதார உரிமை மீட்பு மாவட்ட ஆயத்த மாநாடு நடைபெற உள்ளது அதன் அம் மாநாடுகளில் கலந்து கொள்ளும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் அவர்களின் சூறாவளி சுற்றுப்பயணம், பெரம்பலூர் மாவட்டம்

Image
           இரவு பகல் பாராது இயக்க நிறுவனர் மாவீரர் அப்துல் மஜீத் அவர்களின் வழியில் தொடர்ந்து இயக்க வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்து வரும் நமது பொதுச்செயலாளர் அண்ணன் இரா.தாஸ் அவரகள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் சுற்றுப்பயணத்தின் போது, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்ற வீரர் இயக்க தளபதி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அருள் ஜோதி அவர்களுக்கு இரண்டாவது தவணையாக நாட்காட்டிகளை வழங்கி மேலும் சிறப்பாக செயல்பட பாராட்டுகளை வழங்கினார்.

ஜாக்டோ ஜியோ தொடக்க நடுநிலைப்பள்ளி சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு....

Image
சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் (தொடக்க நடுநிலைப்பள்ளி சங்கங்களின்) சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி... நமது தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கீழ்கண்ட மாவட்டங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்கள் (1) திருவள்ளூர் (2) இராணிப்பேட்டை (3) திருப்பத்தூர் (4)கடலூர் (5) விழுப்புரம் (6) கள்ளக்குறிச்சி  (7) நாகப்பட்டினம் (8) மயிலாடுதுரை (9) பெரம்பலூர்  (10) தர்மபுரி (11) மதுரை (12) கன்னியாகுமரி இவண்.. திரு. ஆ.இலட்சுமிபதி  மாநில தலைவர்  திருமிகு. இரா.தாஸ்  பொதுச் செயலாளர் திரு. பி.தியாகராஜன்  மாநில பொருளாளர்  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,  ச.அப்துல் மஜீத் மாளிகை,  சென்னை-5.

தமிழ்வழிக் கல்வி - பொதுச்செயலாளர் அவர்களின் பத்திரிகைச் செய்தி

Image
 

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுடன் பொதுச்செயலாளர் சந்திப்பு

  12-01-23 காலை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களிடம் ஆசிரியர்,அரசு ஊழியர்களின் கோரிக்கைகள்  பற்றி பொதுச் செயலாளர் அவர்கள் அமைச்சரிடம் எடுத்துக் கூறினார்கள்.

அகவிலைப்படி உயர்வுக்கு நன்றி... முதலமைச்சர் அவர்களுக்கு பொதுச்செயலர் நன்றி....

Image
 இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நமது பொதுச்செயலாளர் திரு. இரா.தாஸ் அவர்கள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதோடு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்தார்.   மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருதல், அகவிலைப்படி நிலுவை,சரண்டர்,ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். அப்போது மாண்புமிகு முதல்வர் அவர்கள் விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக நமது பொதுச்செயலாளர் அவர்களிடம் உறுதி அளித்தார்.

பொதுச்செயலாளர் அவர்களின் பத்திரிகை செய்தி...

Image
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு இரா.தாஸ் அவர்களின் பத்திரிகை செய்தி குறிப்பு  இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் ஆகிய திரு இரா.தாஸ் அவர்கள் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் " சம வேலைக்கு சம ஊதியம் என்னும் ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் டிசம்பர் 27ஆம் தேதி முதல், DPI வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த ஊதிய முரண்பாடு மிகப்பெரிய அநீதி என்றும், இடைநிலை ஆசிரியர்களின் இந்த ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் என்றும் நீண்ட நாட்களாகவே அரசை வலியுறுத்தி வருகிறோம். ஜாக்டோ ஜியோ விலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். எனவே இடைநிலை ஆசிரியர்களின் இந்த ஊதிய முரண்பாட்டை போக்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களும் உடனடியாக கோரிக்கையை பரிசீலித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக ...