தொடக்கக்கல்வி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்ற மதிப்புமிகு பூ.ஆ. நரேஷ் அவர்களை, நமது பொதுச்செயலாளர் திரு. இரா.தாஸ் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். நமது ஆசிரியர்கள் அரசாணை 243 ஆல் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும், கிராமப்புற வட்டாரப் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் மாற்றம் பெற்றுள்ளதால் கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வி பாதிப்புக்கு உள்ளாகும் நிலையை நமது பொதுச்செயலாளர் அவர்கள் இயக்குநருக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.