பொதுச்செயலாளர் அவர்களின் வாழ்த்து மடல்...
மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சரும் ஜாக்டோ ஜியோ முற்றுகைப் போராட்டம் அறிவித்தவுடன் அழைத்து போசிய மூவர் குழுவில் ஆசிரியர் அரசு ஊழியர் பிரச்சனைகளை உள்வாங்கி மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றவரும், எதையும் ஆழ்ந்து அறிந்து புரிதலோடு முடிவு எடுக்கும் ஆற்றல் வாய்ந்த மாண்புமிகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஆசிரியர் அரசு ஊழியர் வாழ்வில் நம்பிக்கை ஒளி வீச தொடங்கி இருக்கிறது.
இழந்த D A,சரண்டர் ஊக்க ஊதிய உயர்வு,அனைவரும் எதிர்பார்க்கும் CPS ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டு ஆகிய பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்.தெரிவித்துக் கொள்கிறேன்.
இரா.தாஸ்
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்
பொதுச் செயலாளர்,
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
Comments