நமது பொதுச்செயலாளர் - தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சந்திப்பு...
இன்று 19-05-23 காலை கோட்டையில் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைமகன் மதிப்புமிகு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்களை தமிழகத்தின் தலைசிறந்த இயக்க வாதியும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப் பாளருமான இரா.தாஸ் அவர்கள் சந்தித்து தமிழ் வணக்கத்தை பரஸ்பரம் தெரிவித்துக் கொண்டபோது பொதுச் செயலாளர் அவர்கள் கிடைத்த ஒரு நிமிட நேரத்தில் தலைமைச் செயலாளர் அவர்களை பல ஆண்டு பின்னோக்கிய சிந்தனையை தூண்டி காஞ்சித் தலைவன் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக சிறப்பாக பணியாற்றிய போது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந் தார்கள். மதிப்புமிகு இறையன்பு அவர்கள் மகிழ்ந்து மனம்விட்டு சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார்கள். ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்களை பெரிதும் விரும்புகிறார்கள் ஆசிரியர் அரசு ஊழியர்சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி விடைபெற்றார்கள்.
Comments