நமது பொதுச்செயலாளர் - மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் சந்திப்பு....
பதவி உயர்வில் பணி மூப்பு முறையையே பின்பற்ற கொள்கை முடிவு எடுக்க வேண்டும் --- மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சரிடம் நமது பொதுச்செயலாளர் கோரிக்கை...
இன்று 19-05-23 காலை மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி அயல்நாடு கல்வி சுற்றுலா சென்றுவந்ததை பாராட்டி வாழ்த்து தெரிவித்து அகவிலைப்படி வழங்கியதற்கு நன்றி தெரிவித்த பொதுச் செயலாளர் அவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.
மேலும் கோரிக்கை மனு அளித்து பொதுச் செயலாளர் அவர்கள் நடை பெறும் கலந்தாய்வில் பழையபடி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் நடைபெற நீதிமன்றத்தில் உரியவழியில் முயன்று பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும்,மேலும் புதியதாக பிரிக்கப்பட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் தாய் ஒன்றியத்திற்கு ஈர்க்கு வகையில் கலந்தாய்வில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும்,(உதாரணமாக சங்கராபுரம் ஒன்றியம் )மேலும் தெலுங்கு மொழி ஆசிரியர்களின் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளதை கவணத்தில் கொண்டு சென்று தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுச் செயலாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். மேலும் நிலுவையில் உள்ள பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் மற்றும் நிறுத்தி வைத்துள்ள சரண்டரை வழங்க வேண்டும்,ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டார் கள் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஒவ்வொன்றாக, விரைவாக செயல்படுத்தப் படும் என்று கூறினார்கள்.
Comments