மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் வரும் வாய்ப்பு....

 எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே !



எத்தனை போராட்டம், எத்தனை ஆர்ப்பாட்டம்,மேடை தோறும் பழையபடி பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தை அளிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோரிடம் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நமது பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் வலியுறுத்தி பேசி வந்தார்கள் என்பதை அனைவரும் அறிவீர்கள்.

வாழ்வாதார மாநாட்டில் அரசாணை எண் 101, ரத்து செய்யப்பட்டாலும்,மழை நின்றும் தூவானம் விடவில்லை என்பதுபோல அரசாணை 101 ரத்து செய்யப்பட்டும் பழைய நிலை திரும்ப வில்லை, பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் எட்டாக் கனியாக இருந்தது.

அதிகாரிகள் அத்துமீறல்கள்  அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அதனால்தான் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்த உடன் மூன்று அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தபோது அதிகாரிகள் அத்துமீறல்கள் அதிகமாக உள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பொதுச் செயலாளர் அவர்கள் செய்தியாளர் கூட்டத்திலும் அதிகாரிகளின் அத்து மீறல்களை சுட்டிக் காட்டினார்கள்.

பள்ளிக் கல்வி இயக்குநர் வளாகம் பள்ளிக் கல்வி ஆணையர் வளாகமாக மாறியது.

இந்த நிலையில் நமது பொதுச் செயலாளர் அவர்களின் கடும் முயற்சியால்,எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற விடா முயற்சியின் பயனாக இன்று ஆணையாளர் மாற்றப்பட்டு அந்த பணியிடம் நிறப்பப் படாமல் உள்ளது,பழையபடி பள்ளிக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட பிரகாசமான வாய்ப்பு உள்ளது பொருத்திருப்போம்.

பள்ளிக் கல்வி இயக்குநர் பணியில் இயக்குநரை அமர்த்தி அழகு பார்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.நன்றி வணக்கம்.


   ஆ.இலட்சுமிபதி

   மாநிலத் தலைவர்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...