மாண்புமிகு தமிழக முதல்வருடன் பொதுச்செயலாளர் சந்திப்பு...
இன்று 18-05-23 காலை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் தலைமையில் கோட்டையில் சந்தித்து அகவிலைப்படி உயர்வு வழங்கியதற்கு நன்றியும், பழையபடி பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தை வழங்க வேண்டும் என்றும், பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டு, நிறுத்தி வைத்துள்ள ஊக்க ஊதிய உயர்வு,சரண்டர் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இயக்க பொதுச் செயலாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொறுமையாக கேட்டதுடன் ஆவண செய்வதாக கூறினார்கள்.உடன் மாநிலத் தலைவர் இலட்சுமிபதி திருவண்ணாமலை மாவட்ட தலைவர் அன்பழகன்,மாநில துணைப் பொதுச் செயலாளர் புருஷோத்தமன் உடன் இருந்தனர்.
மாலை மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் க.அறிவொளி அவர்களை சந்தித்து பேச இயக்குனரகம் சென்ற நிலையில் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் க.அறிவொளி அவர்கள் மதுரையில் எண்ணும் எழுத்தும் பயிற்சியில் இருப்பதாக அறிந்த நிலையில் பொதுச் செயலாளர் அவர்கள் தொலைபேசியில் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை தொடர்பு கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்தில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட கல்வராயன் மலை ஒன்றியத்தில் சேர்க்கப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடைபெற உள்ள கலந்தாய்வில் சங்கராபுரம் ஒன்றியத்தில் அதாவது தாய் ஒன்றியத்திற்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று ஏற்கனவே தங்களிடம் கோரி இருந்த நிலையில் இதுவரை ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியல் வெளியிடவில்லை எனவே கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார் கள்.
அதற்கு இயக்குநர் அவர்கள் தங்களது கோரிக்கை பரிசீலனையில் உள்ளது இது தொடர்பாக துணை இயக்குநர் (பொறுப்பு) பூபதியிடம் நடவடிக்கை எடுக்க கூறியுள்ளேன் , என்று கூறினார்கள்.
பிறகு மதிப்புமிகு மதிப்புமிகு துணை இயக்குநர் அவர்களை. இயக்குநர் அலுவலகத்தில் சந்தித்து இயக்குநர் கூறிய தகவலை கூறி கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. மதிப்புமிகு துணை இயக்குநர் அவர்கள் குறித்துக் கொண்டு நாளை இயக்குநரிடம் கலந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்.
பிறகு இரவு 7 மணி அளவில்.மதிப்புமிகு இணை இயக்குநர் PA.நரேஷ் (நிர்வாகம்) அவர்களை சந்தித்து ஆசிரியர் பிரச்சனை மற்றும் கலந்தாய்வு தொடர்பாக பேசப்பட்டது.
ஆ.இலட்சுமிபதி
மாநிலத் தலைவர்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
Comments