மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுடன் நமது பொதுச்செயலாளர் சந்திப்பு....
உறவுக்கு கைகொடுப்போம்,
உரிமைக்கு குரல் கொடும்போம்
இன்று மக்கள் நாயகன் முன்னாள் பள்ளிக் கல்வி துறை அமைச்சர், இந்நாள் நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களை ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப் பாளரும், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள்.
அப்போது பொதுச் செயலாளர் அவர்களை அன்புடன் வரவேற்ற அமைச்சர் அவர்கள் "பள்ளிக் கல்வித் துறை அதில் பணியாற்றும் ஆசிரியர் நலன் அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர் நலம் முற்றும் அறிந்துள்ளேன். உங்கள் கோரிக்கைகள் அனைத்திற்கும் உரிய நேரத்தில் தீர்வு காணப்படும்" என்று கூறியது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.இ
ன்றைய சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.
மேலும் நமது இயக்க இதழை பார்த்து ரசித்த அமைச்சர் இது ஒரு வரலாறு என்று பாராட்டினார்கள்.
உடன் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
- மாநில மையம்
Comments