Posts

பொதுச்செயலாளர் அவர்களின் பத்திரிகை செய்தி...

Image
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு இரா.தாஸ் அவர்களின் பத்திரிகை செய்தி குறிப்பு  இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் ஆகிய திரு இரா.தாஸ் அவர்கள் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் " சம வேலைக்கு சம ஊதியம் என்னும் ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் டிசம்பர் 27ஆம் தேதி முதல், DPI வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த ஊதிய முரண்பாடு மிகப்பெரிய அநீதி என்றும், இடைநிலை ஆசிரியர்களின் இந்த ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் என்றும் நீண்ட நாட்களாகவே அரசை வலியுறுத்தி வருகிறோம். ஜாக்டோ ஜியோ விலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். எனவே இடைநிலை ஆசிரியர்களின் இந்த ஊதிய முரண்பாட்டை போக்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களும் உடனடியாக கோரிக்கையை பரிசீலித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக ...

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

Image
 ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 26/12/2022 அன்று சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.  தமிழக ஆரம்பப்பளளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் ஆகிய இரா.தாஸ் மற்றும் ஜே.காந்திராஜ் ஆ.செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது அதில் கீழ்க்கண்ட முடிவுகள் தீர்மானிக்கப்பட்டன. பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் முடக்கப்பட்ட அகவிலைப்படி,சரண்டர் உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.  தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சத்துணவு,அங்கன்வாடி,MRB செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோரு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 05/01/23 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. வாழ்வாதார கோரிக்க...

ஆணையருடன் சந்திப்பு -மாநிலத் தலைவர் அறிக்கை

  நன்றி மறப்பது நன்றன்று இன்று 07-02-2022 மதியம் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மதிப்புமிகு பள்ளிக் கல்வி ஆணையாளர் அவர்களை சந்திக்க 3.30 மணி அளவில் அலுவலகம் சென்றோம், பார்வையாளர்கள் அறையில் அமர்ந்து இருந்தோம் சந்திக்கின்ற நேரம் நெருங்கும் வேளை, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு மதிப்புமிகு ஆணையாளர் அவர்கள் செல்லவேண்டிய நிலையில், கூட்டம் முடிந்து வரும் வரை காத்திருந்தோம். ஏழு மணி அளவில் ஆணையாளர் அவர்கள் மீண்டும் அலுவலகம் வருகை தந்தார்கள்.அச்சமயம் நேரில் சந்தித்த நிகழ்வு. 1.முதலில் LKG, UKG க்கு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய பணிநிலைக்கே மாறுதல் பெற தொடர்ந்து நாம் வலியுறுத்தியதின் அடிப்படையில்,மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், பள்ளிக் கல்வி ஆணையாளர் அவர்களின் அறிவுரத்தலின்படி மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள்  உரிய ஆணை வெளியிட்டதற்கு ஆணையாளர் அவர்களிடம் இடைநிலை ஆசிரியர்களின் கெளரவத்தை பாதுகாத்ததற்காக இயக்கத்தின் சார்பில் நமது பொதுச் செயலாளர் அவர்கள் நன்றியை தெரிவி...

மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் - பொதுச்செயலாளர் சந்திப்பு

Image
  பொதுச்செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்த நிகழ்வு... இன்று (20-01-2022) மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ்  பொய்யாமொழி அவர்களை ஆசிரியர்களின் பாதுகாவலர் நமது இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் திரு. இரா. தாஸ் அவர்களுக்கும் மாநிலதலைவர், பொருளாளர் மற்றும் பொறுப்பாளர்கள் சந்தித்து இயக்க நாள்காட்டி மற்றும் நாட்குறிப்பு ஆகியவற்றை அளித்து கொரோனாகாலத்தில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பல்வேறு இடர்பாடுகள் பற்றியும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள் பற்றி தெரிவித்தனர். *மாண்புமிகு அமைச்சர்* அவர்களை அவரது இல்லத்தில் இயக்க தோழர்களோடு நமது பொதுச் செயலாளர் அவர்கள் உள்ளே நுழைந்ததும் மிகவும் மகிழ்ந்து வாங்க அண்ணா என்று அழைத்து நலம் விசாரித்தார். பொதுச் செயலாளர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்த நாளில் சந்திக்க முடியாததை கூறி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் நாட்காட்டி வழங்கியதும் அதை பக்கம் பக்கமாக திரும்பி பார்த்து ரசித்தார்கள்.அதில் எந்த படம் தங்களுக்கு பிடிக்கிறது...

1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது

1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில், 1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி ...

தேர்தல் பணி ஊழியர்கள் வாக்களிக்க தனிவாக்குச்சாவடி : அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை

தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள் வாக்களிக்க சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளை அமைத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நா...

டில்லி சலோ.......

பிளஸ் டூவில் பிரமாதமான மார்க் எடுத்த பிள்ளையிடம், ' நீ பி.ஏ. எகனாமிக்ஸ் படி ..!' என்று சொன்னால், அவனுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும்..? இந்த பட்ட படிப்பு நம்மூரை பொருத்த வரை, ...