முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களுக்கு பொதுச்செயலர் அஞ்சலி

இன்று 21-05-23 காலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் ஸ்ரீ பெரும்புதூர் சென்று பஞ்சாயத் ராஜ் சட்டத்தின் பிதாமகன், அன்னை இந்திரா காந்தியில் தவப்புதல்வர், இந்தியாவின் சிற்பி பண்டித ஜவகர்லால் நேருவின் பெயரன் ஆகிய சிறப்புகளை கொண்ட முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளில் நினைவு அஞ்சலி செலுத்திய நிகழ்வு. நிகழ்வில் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரியை சந்தித்து நலம் விசாரித்த நிகழ்வு பாராட்டுக்குரியது . பொதுச் செயலாளருக்கு இயக்கத்தின் சார்பில் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். ஆ.இலட்சுமிபதி மாநிலத் தலைவர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.