Posts

Showing posts from April, 2024

மாநில மையம் அறிக்கை...

Image
நேற்று 29-04-24 திருவண்ணாமலை மாவட்டம் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் அடிப்படையில் கீழ்பென்னாத்தூர் வட்டாரம்,வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களின் நடவடிக்கை பற்றியும் அதனால் ஆசிரியர்கள் மத்தியல் ஏற்பட்ட அச்சத்தை பற்றியும் சி.அ.முருகன் பொதுச்செயலாளர் கவணத்திற்கு கொண்டு வந்தார்கள். நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில்  TET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யும்படி மா.கல்வி அலுவலரின் நடவடிக்கை பற்றி பொதுச்செயலாளர் கவணத்திற்கு வந்ததும், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் பொதுச் செயலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதின் அடிப்படையில் கீழ்கண்ட விளக்கம் அளிக்கப் படுகிறது. பதவி உயர்வு வழங்குவதில் TET தேர்ச்சி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது, அதற்காக TET தேர்ச்சி பெற்று நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள், மற்றும் பணிமூப்பு பட்டியல் படி பதவி உயர்வுக்கு தகுதி  வாய்ந்தவர்கள் பட்டியல் நீதிமன்ற வழக்குக்காக தேவைப்படுகிறது அதற்காக பட்டியல் கேட்டுள்ளோம் ஆசிரிய...

பண்ருட்டி வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் வாழ்த்துரை...

Image
  கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டார பணிநிறைவு பாராட்டு விழாவில் பொதுச்செயலாளர் திரு.இரா.தாஸ் அவர்கள்... இயக்கப்பேருரை நிகழ்த்திய போது... விழாவில் மாநிலத்தலைவர் திரு. ஆ.இலட்சுமிபதி அவர்கள் ,மாநிலப் பொருளாளர் திரு. பி.தியாகராசன் அவர்கள், மாநில மகளிரணிச் செயளாலர் திருமதி. சௌ.கிருஷ்ணகுமாரி அவர்கள் ,மாநில தணிக்கைச் செயலாளர் திரு. மு.கங்காதரன் அவர்கள் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

  இணைய செய்தி பாலக்கோடு: அண்ணா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. 

விழுப்புரம் பணி நிறைவு பாராட்டு விழா காணொளிகள்...

Image
 

வாணியம்பாடி வட்டார பணி நிறைவு பாராட்டு விழா.... பொதுச்செயலாளர் சிறப்புரை

Image
  வாணியம்பாடியில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடைபெற்ற பணி நிறைவு செய்யும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் நமது பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

கீழ்பென்னாத்தூர் வட்டார பணி நிறைவு பாராட்டு விழா - பொதுச்செயலாளர் பங்கேற்பு

Image
  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கீழ்பென்னாத்தூர் வட்டாரக் கிளை சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது  நிகழ்வில் மாநிலத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பங்கேற்று ஓய்வு பெறும் ஆசிரியப் பெருமக்களை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினர்.

மதுராந்தகம் வட்டாரம் பணி நிறைவு பாராட்டு விழா... பொதுச்செயலாளர் பாராட்டுரை

Image
 தற்போது (27-04-2024) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டாரம் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. வட்டாரத் தலைவர் திரு.ஆ.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர் திரு.சு.மணிமோகன் அவர்கள் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெறுகிறது. விழாவில் முன்னாள் மாவட்ட செயலாளர் திரு.மு.பரமானந்தம் அவர்கள் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் திரு ஏகாம்பரம் திரு. பெ.கொம்பையா மற்றும் பல்வேறு மாநில,வட்டார பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். நமது மாநில பொதுச்செயலர் அவர்கள் பணி நிறைவு செய்யும் விழா நாயகர் திரு.க.வேதாசலம் அவர்களை பாராட்டி அவர் மதுராந்தகம் கிளை ஆரம்பிக்க காட்டிய முனைப்பு, அவரின் இயக்கப் பணி ஆகியவற்றை பாராட்டி பழைய ஓய்வூதியம், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு,ஏழை மக்கள் பயன்பெறும் அரசுப்பள்ளி பணியிடங்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்து பேசினார் .  தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது. விழா குறித்து காட்சி ஊடகங்களில் செய்தி: புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி தமிழன் தொ...

சூளகிரி வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்பு.

Image
  விழா நிகழ்வு வீடியோவை பார்க்க click செய்யவும் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. சூளகிரி வட்டார தலைவர் திரு திம்மராயன் அவர்கள் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் திரு.ஜெபதிலகன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். பாராட்டு விழாவில் பங்கேற்ற நமது பொதுச்செயலாளர் பழைய பென்ஷன் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை தீர்க்க வேண்டும், கருவூல இணையதளம் IFHRMS  மூலம் வருமான வரி பிடித்தம் செய்வதில் உள்ள குழப்பங்களை சரி செய்தல் வேண்டும், EMIS இணையதளத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து ஆசிரியர்கள் நலன் காக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஊடக செய்தி இணைப்புகள்:

நெமிலி வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்பு

Image
  TAAK பணிநிறைவு பாராட்டு விழா : இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டார பணிநிறைவு பாராட்டு விழா இன்று மாலை பனப்பாக்கம்  ஊ.ஒ.தொ.பள்ளியில் வட்டாரத் தலைவர் திரு.சு.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைமை நிலையச் செயலாளரும் மாவட்டச் செயலாளருமான திரு.பா.பாலமுருகன் அவர்கள் கலந்துக் கொண்டு நினைவுப்பரிசு வழங்கி, இயக்கபேருரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் திரு.அ.பிரகாசம்,  மாவட்ட ஓய்வு பிரிவு செயலாளர் திரு.இரா.அருள்ஜோதி, காவேரிப்பாக்கம் வட்டாரத் தலைவர் திரு.மோ.பாஸ்கரன் மற்றும் மேனாள் ஓய்வு பிரிவு செயலாளர் திரு.பா.உத்தமன் உள்ளிட்ட மாவட்ட, வட்டார நிர்வாகிகள் சிறப்புரைஆற்றினார்கள். வட்டாரச் செயலாளர் திரு.இரா.விநாயகம் அனைவரையும் வரவேற்றார். வட்டார பொருளாளர் திரு.நா.சுப்பிரமணி  நன்றியுரை ஆற்றினார். விழாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட  ஆசிரியர் பெருமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

காவேரிப்பாக்கம் வட்டார பணி நிறைவு பாராட்டு விழா செய்தி

Image
  TAAK இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் வட்டார பணிநிறைவு பாராட்டு விழா செய்தி. இன்றைய தினகரன் நாளிதழில்... நன்றி...

பொதுச் செயலாளர் மடல்

Image
 அன்பிற்கினிய இயக்ககண்மணியே வணக்கம்....                    தேர்வு இறுதி நாட்களில் பயணிக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்...... அதேபோல் இயக்க த்தில் உறுப்பினராக இணைந்து பட்டியலை இறுதி படுத்தி ஒப்படைக்க வேண்டிய இறுதி வாரத்தில் வட்டார செயலாளர் மற்றும் தலைவர் மற்றும் பொருளாளர் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் உள்ளதை மறந்துவிட மாட்டீர்கள்  என்பதை நான் அறிவேன் எனவே மாவட்ட செயலாளர் மற்றும் வட்டார செயலாளர் இதனை உறுதி படுத்தி வட்டார உறுப்பினர் பட்டியல் இறுதி படுத்தி ஒப்படைக்க வேண்டும் என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர்பணி அறப்பணி அதற்கே உன்னை அற்பணி என்பதும்  ..நம் படைப்புகள் ஓவ்வொரு உயரிய ஓவியங்கள் இந்த சமூகத்தில் அலங்காரம் செய்ய உள்ளார்கள் எனவேஅற்புதமான கல்வி பணியில் தன்னை இணைத்துக் கொண்டு களப்பணிகள் ஆற்றும் கடமை தொடரட்டும் வாழ்த்துக்கள். அன்புடன்                இரா.தாஸ்   பொதுச் செயலாளர். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 

தீவிர உறுப்பினர் சேர்க்கை - நெமிலி, சோளிங்கர் வட்டாரம்.

Image
 நெமிலி வட்டாரம் மற்றும் சோளிங்கர் வட்டாரம் இராணிப்பேட்டை மாவட்டம்.  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் திரு.பா.பாலமுருகன் அவர்கள்  அறிவுறுத்தலின்படி, இன்று (17/04/2024) இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டாரம், மேலபுலம் ஊ.ஒ.தொ.பள்ளியில்  நடப்பாண்டிற்கான உறுப்பினர் சேர்க்கையை முழுமைப்படுத்தப்பட்டன.  சோளிங்கர் வட்டாரம், வைலாம்பாடி பாரதி நிதியுதவி தொ. பள்ளியில் மாவட்டச் செயலாளர் திரு.பா.பாலமுருகன் அவர்கள்  நடப்பாண்டிற்கான உறுப்பினர் சேர்க்கையை முழுமைப்படுத்தினார். உடனிருந்து உழைத்த வட்டாரப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்... நன்றி இராணிப்பேட்டை மாவட்டம். 

கொள்ளிடம் பணி நிறைவு பாராட்டு விழா... பொதுச்செயலாளர் பாராட்டு.

Image
  எழுச்சியான பணி நிறைவு பாராட்டு விழா மயிலாடுதுறை மாவட்ட கொள்ளிடம் வட்டாரம் கட்டுப்பாடு.கலைகட்டிய கூட்டம் ஏற்பாடுகள்... நினைவு நீங்கா நீகழ்ச்சிகள் கடுமையான உழைப்பு..  வட்டார தலைவர் சிங்காரவேலு அவர்கள் உடல் நலம் இன்மையும் (எழுந்து நிற்காமல் இருந்தவர்)உடைத்து எரிந்து எழுந்து நிற்க செய்த இயக்க உணர்வுகள்.. நிகழ்சிகள் வட்டார செயலாளர்.சங்கர் மாநில துணை பொதுச் செயலாளர் கமலநாதன் மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம் சிதம்பரத்தில் இருந்து பொதுச் செயலாளர் வரவேற்பு அளித்து அழைத்து சென்றார் பாராட்டுக்கள் உள்ளிட்ட வட்டார நிர்வாகிகள் அனைவருக்கும் மற்றும் மாவட்ட  மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் பங்கேற்ற இயக்க கண்மணிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அன்புடன் இரா.தாஸ்  பொதுச் செயலாளர்

நமது பொதுச்செயலாளர் தலைமை தேர்தல் அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு...

Image
  இன்று 15.4.2024  தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதசாகு அவர்களை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் அவர்கள் கோரிக்கை மனு அளித்தார்.  தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்து பேசினார்.... இதில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிட நூறு சதவீதம் வாக்குகள் அளிக்க வேண்டும் என்றும் .பொதுமக்கள் 100% வாக்களிக்க விழிப்புணர்வு அளித்து வரும் அரசு, ஆசிரியர் , அரசு ஊழியர்கள்  100% வாக்குகள் அளிக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் இதனை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் கண்காணிப்பு செய்ய வேண்டும் இன்று இருக்கும் தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தி தேர்தல் பணி தபால் ஓட்டு மற்றும் EDC  வ அளித்திட வழிவகைசெய்திட வேண்டும்  தற்போது ஊழியர்கள் அலைகழிக்கும் நிலை உள்ளது எனவே .. சிறப்பு மூகாம் மேலும் ஒருநாள் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.... அதற்...

தேர்தல் பணி குறித்து நமது பொதுச்செயலாளர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

Image
 திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் பிரபுசங்கர் அவர்களை ஜாக்டோ ஜியோ சார்பாகவும் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் அவர்கள் மற்றும் ஜாக்டோஜியோ உயர் மட்ட குழு உறுப்பினர் கள் ஞானசேகரன் மற்றும் பிரபாகரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஜாக்டோஜியோ உயர் மட்ட குழு உறுப்பினர் முரளி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து தேர்தல் பணி யில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் அரசு ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்  கோரிக்கையை கனிவாக பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் சென்னை மாவட்டத்திற்கு சென்றுவிட்ட அம்பத்தூர் மற்றும் மாதவரம்.திருவெற்றியூர்  பகுதிகளுக்கும் தேர்தல் அலுவலராக நமது மாவட்ட ஆட்சியர் இருப்பதால் அப்பகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து ஊழியர்கள் ஆசிரியர்களும் இந்த முறை தேர்தல் பணியை சிறப்பாக நடத்தித் தருமாறு மாவட்ட ஆட்சியர் நம்மிடம் தெரிவித்தார்  ஜாக்டோ ஜியோ சார்பாக பெண் ஆசிரியர் மற்றும் ஊழியர்களை அருகாமையில் இருக்கக்கூடிய தொகுதியில் உள்ள வாக்கு சாவடியில் பணிநியமி...

பழைய ஓய்வூதியத் திட்டம் பெறும்வரை ஓயமாட்டோம்..... பொதுச்செயலாளர் சூளுரை.

Image
  பழைய ஓய்வூதிய திட்டம் பெறும்வரை, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையும் வரை போராடுவோம் என நமது தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர் திரு.இரா.தாஸ் அவர்கள் கொள்ளிடத்தில் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில் செய்திதாளுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 

மாநிலத்தலைவர் ரமலான் வாழ்த்து மடல்

Image
புனித   ரமலான் வாழ்த்து   வாழும் முறைபற்றி வழிகாட்டும் இஸ்லாத்தில் ஈதல் கடமையென வருவாயில் ஒரு பகுதி நாணயமாய் வழங்க வேண்டும்* *என்றே நபிகளார் ஆணையிட்டார். மனிதநேயம் கொண்டே அல்லாவின் பெயரில் வழங்கி வாழ்வதே மகிழ்ச்சி என்று ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள். ஆ.இலட்சுமிபதி. மாநிலத் தலைவர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

பொதுச்செயலாளர் அவர்களின் தெலுங்கு புது வருட வாழ்த்து செய்தி...

Image
 

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...

Image
  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் வட்டார பணிநிறைவு பாராட்டுவிழாவில் நமது பொதுச்செயலாளர், மாநிலத் தலைவர் உள்ளிட்ட மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டப் பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் வாழ்த்துரை

Image