Posts

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்அவர்கள் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள், அவர்கள் ஆகிய இருவரையும் டிட்டோஜாக் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கைகள் குறித்துபேசினர். It.29/06/2026

Image
 டிட்டோஜாக் அமைப்பு நேற்று (29/06/2026)மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் மற்றும்  சட்டம் மற்றும் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் ஆகிய இருவரையும்  சந்தித்தனர்... அப்போது ஒன்றியத்திற்குள் பணி நிரவல், SMC கூட்ட தேதி மாற்றம், ஓய்வு பெறுபவர்களுக்கு Superannuation சார்ந்து ஆசிரியர்களின் பல கோரிக்கைகள் குறித்து நமது பொதுச்செயலாளர் அவர்கள் பேசினார்... மாண்புமிகு அமைச்சர்களுடனான இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் அவர்களுக்கு நன்றி..

TETOJACK MEETS ELEMENTRY EDUCATION DIRECTORS REGARDING TEACHERS DEPLOYMENT

Image
*TAAK மாநில செய்தி* மாநில டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இன்று29.6.2026தொடக்கக்கல்வி இயக்குநர்  *மதிப்புமிகு முனைவர் பூ.ஆ.நரேஷ்*. அவர்களை சந்தித்து பேசினர் இணைஇயக்குநர் நிர்வாகம் மதிப்பு மிகு சுவாமி நாதன் அவர்கள் உடன் இருந்தார்.. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ் பங்கேற்று பேசினார் . சுழல் முறை தலைவர் தமிழ் நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் தோழர் மயில்  மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர்கள். குறிப்பாக 3.7.2026 மறுநாள் ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு நடைபெறுவதால்  SMCகூட்டத்தை மாற்றி வைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது இயக்குனர் அவர்கள் உடனடியாக SPD தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார் உடனடியாக மாற்றி அமைத்து 10 .7 .2026 SMC கூட்டம் நடைபெறுவதாக ஆணை வெளியிடப்பட்டது. நன்றி தெரிவித்து கொள்கிறேன்.  . டிட்டோஜாக் சார்பில்  மதிப்பு மிகு தொடர் கல்வி இயக்குனர் மதிப்பு மிகு முனைவர் பூஆ.நரேஷ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.  தொடர்...

நமது இயக்க மாநில தேர்தல் பணியில் பொதுச்செயலாளர் இன்று(27/06/2026)

Image
சென்னை தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைமை அலுவலகம் சென்னையில்.. பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் தலைமை அலுவலக கட்டடத்தில் இயக்கத்தின் களப்பணிகள் நடைபெற்று வருகிறது இதில் இராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் பிரகாஷ் திருவள்ளூர் மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் வட்டார செயலாளர்  மகேந்திரன். பொதுச் செயலாளர் அழைப்பை ஏற்று ,இருவர் பங்கேற்று தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணியை செய்து வரும் காட்சி...

பொதுச்செயலாளர் தொடக்கக் கல்வி இயக்குநர் உடன் சந்திப்பு ...நாள்: 24/06/2025

Image
மதிப்பு மிகு தொடக்க கல்வி இயக்குநர் மதிப்பு மிகு.பூ.ஆ.நரேஷ் அவர்களை  மரியாதை நிமித்தமாக சந்தித்து.பேசினார்  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் அவர்கள். சந்திப்பின் போது. ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிக்கான முன்னுரிமை முழுமையாக வழங்கிடவும் மேலும் கலந்தாய்வு சார்ந்த கோரிக்கை மற்றும்.. பணிநிரவல். TET ..பதவி உயர்வு ...5400..தர ஊதியம்.. தணிக்கை.. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பேசினார்... கலந்தாய்வு விரைவில்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் நினைவிடத்தில் பொதுச்செயலாளர் அஞ்சலி செலுத்தினார்

Image
*இயக்குனர் சிகரம் மறைந்த பாரதிராஜா அவர்களின் நினைவிடத்திற்கு* மதுரையில்.... கங்குவார்பட்டி.... காட் ரோடு.... (கொடைக்காணல். பெரியகுளம் சாலையில்) *18.6.2026...*பண்ணைவீடுசென்று மலர் அஞ்சலி* *செலுத்தி வீரவணக்கம் செய்தார். மாநில பொதுச் செயலாளர் ஜாக்டோ ஜியோ மற்றும் டிட்டோ ஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ்*  அவர்கள் உடன் மாவட்ட செயலாளர்  *பொற் செல்வன்*  மாவட்ட நிர்வாகி  *பால மனோகரன்*. *என் இனிய தமிழ் மக்களே* என்ற ஒற்றை சொல்  நம்மை. தமிழன்என்று கட்டிபோட்டது. அந்த கம்பீரக் குரல் .... *மண்வாசனை மண்ணுக்குள் விதைத்துள்ளோம்*. தமிழ் சினிமாவில் பிரமாண்டங்கள். நம் கண்ணுக்குள் கொண்டு வந்து காட்டிய கலை தலைவன் இன்று  *மண்ணில்*. .....  *விண்ணில்*.......  *கலை படைப்பு படைக்க..பிடிக்க சென்றாறோ*.. வீரவணக்கம்.... மலர் அஞ்சலையும் வீர வணக்கத்தையும் செலுத்தி விட்டு அவருடைய பண்ணை தோட்டத்தின் இல்லத்திற்குச் சென்றோம் அங்கே மறைந்த இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்கள் திரு உருவப்படம்  வைக்கப்பட்டு இருந்தது. உள்ளே அவருடைய துணைவியார் அம்மையார் அமர்ந்திருந்தார் .. தொடர்ந்து...

சின்ன சேலம் வட்டாரம் பணி நிறைவு பாராட்டு விழா

Image
சின்ன சேலம் வட்டாரத்தில் பணி நிறைவு பாராட்டு விழா 28/04/2026 அன்று நடைபெற்றது விழாவில் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கிய மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் நிகழ்வு....

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பணி நிறைவு பாராட்டு விழா

Image
கள்ளக்குறிச்சி மாவட்ட திருக்கோவிலூர் வட்டாரத்தில் முப்பெரும் விழா 28/04/2026 அன்று நடைபெற்றது பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் பாராட்டி நினைவு பரிசு சிறந்த ஆசிரியர்களுக்கு விருது மாணவர்களுக்கு விருது. என்று முப்பெரும் விழாவில் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ் பங்கேற்று பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.வட்டாரா நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் /மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். .மாவட்ட /வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர்...விழா மாநாடு போன்ற நிகழ்வுகள்.  முப்பெரும் விழா ஓர் வரலாறு.....