Posts

Showing posts from 2023

தமிழ்நாடு அரசு - டிட்டோ ஜாக்குடன் பேச்சு வார்த்தை

Image
நமது பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் நீதிமன்ற தீர்ப்பு நமக்கு எதிராக வந்தவுடன்  டிட்டோஜாக் கூட்டத்தை கூட்ட  முயற்சி எடுத்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.நேற்று  மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து பதவி உயர்வு தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தி பேசினார்கள். மேலும் டிட்டோஜாக் கூட்டத்தில் எடுத்த நடவடிக்கை குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரை சந்தித்து டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்து விவாதித்தனர். இன்று அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து 09-06-23 ல் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. கூட்டு நடவடிக்கை குழு முதல் கட்டமாக வெற்றியை நோக்கி பயணிக்கிறது. தொடர்ந்து களப்பணி ஆற்றி வெற்றி பெறுவோம். விரைந்து நடவடிக்கை எடுத்த மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களுக்கும், மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கும், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கும் நன்றி. ஆ.இலட்சுமிபதி மாநிலத் தலைவர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

டிட்டோஜாக் நடவடிக்கை இயக்குனர்களுடன் சந்திப்பு

Image
  இன்று 06-06-23 காலை சென்னையில் டிட்டோஜாக் உயர்மட்டக்குழு கூட்டம் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில கட்டடத்தில் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.ச.மயில் தலைமையில் நடைபெற்றது அதில் டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு   ஆசிரியர்களின் பதவி உயர்வு,நீதிமன்ற தடை,அடுத்து எடுக்க வேண்டிய   நடவடிக்கைகள் பற்றி கூட்டத்தில் விவாதித்து மூன்று கட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு   வெளியிடப்பட்டது .  உடன் டிட்டோஜாக் உயர்மட்ட குழு தலைவர்கள்   மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர்   க.அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு மற்றும் போராட்ட தகவலை தெரிவித்தனர். 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களுக்கு பொதுச்செயலர் அஞ்சலி

Image
   இன்று 21-05-23 காலை  இயக்கத்தின் பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் ஸ்ரீ பெரும்புதூர் சென்று பஞ்சாயத் ராஜ் சட்டத்தின் பிதாமகன், அன்னை இந்திரா காந்தியில் தவப்புதல்வர்,   இந்தியாவின் சிற்பி பண்டித ஜவகர்லால் நேருவின் பெயரன் ஆகிய சிறப்புகளை கொண்ட முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளில் நினைவு அஞ்சலி செலுத்திய நிகழ்வு.   நிகழ்வில் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்   அழகிரியை சந்தித்து நலம் விசாரித்த நிகழ்வு   பாராட்டுக்குரியது .  பொதுச்  செயலாளருக்கு இயக்கத்தின் சார்பில் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.   ஆ.இலட்சுமிபதி  மாநிலத் தலைவர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

நமது பொதுச்செயலாளர் - மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் சந்திப்பு....

Image
   பதவி உயர்வில் பணி மூப்பு முறையையே பின்பற்ற கொள்கை முடிவு எடுக்க வேண்டும் --- மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சரிடம் நமது பொதுச்செயலாளர் கோரிக்கை... இன்று 19-05-23 காலை மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி அயல்நாடு கல்வி சுற்றுலா சென்றுவந்ததை பாராட்டி வாழ்த்து தெரிவித்து அகவிலைப்படி வழங்கியதற்கு நன்றி தெரிவித்த பொதுச் செயலாளர் அவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.  மேலும் கோரிக்கை மனு அளித்து பொதுச் செயலாளர் அவர்கள் நடை பெறும் கலந்தாய்வில் பழையபடி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் நடைபெற நீதிமன்றத்தில் உரியவழியில் முயன்று பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும்,மேலும் புதியதாக பிரிக்கப்பட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் தாய் ஒன்றியத்திற்கு ஈர்க்கு வகையில் கலந்தாய்வில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும்,(உதாரணமாக சங்கராபுரம் ஒன்றியம் )மேலும் தெலுங்கு மொழி ஆசிரியர்களின் தலைமை ஆசிரியர் பதவ...

நமது பொதுச்செயலாளர் - தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சந்திப்பு...

Image
                 இன்று 19-05-23 காலை கோட்டையில் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைமகன் மதிப்புமிகு தலைமைச் செயலாளர்  வெ.இறையன்பு அவர்களை  தமிழகத்தின் தலைசிறந்த இயக்க வாதியும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப் பாளருமான இரா.தாஸ் அவர்கள் சந்தித்து தமிழ் வணக்கத்தை பரஸ்பரம் தெரிவித்துக் கொண்டபோது பொதுச் செயலாளர் அவர்கள் கிடைத்த ஒரு நிமிட நேரத்தில் தலைமைச் செயலாளர் அவர்களை பல  ஆண்டு பின்னோக்கிய சிந்தனையை தூண்டி காஞ்சித் தலைவன் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக சிறப்பாக பணியாற்றிய போது  நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந் தார்கள். மதிப்புமிகு இறையன்பு அவர்கள் மகிழ்ந்து மனம்விட்டு சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார்கள். ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்களை பெரிதும் விரும்புகிறார்கள் ஆசிரியர் அரசு ஊழியர்சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி விடைபெற்றார்கள்.

முதல்வருக்கு நன்றி.... பத்திரிகை செய்தி

Image
  தமிழ்நாடு அரசில் பணி புரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக அரசு கூட்டணியின் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு இரா.தாஸ் மாநில தலைவர் திரு ஆ.இலட்சுமிபதி  மற்றும் நிர்வாகிகள் அன்பழகன்,புருஷோத்தமன் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இது குறித்த பத்திரிகை செய்தியை மாலை முரசு நிறுவனம் வெளியிட்டமைக்கு நன்றி.... செய்தியின் முழு விவரத்தையும் அறிய  

மாண்புமிகு தமிழக முதல்வருடன் பொதுச்செயலாளர் சந்திப்பு...

Image
          இன்று 18-05-23 காலை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் தலைமையில் கோட்டையில் சந்தித்து அகவிலைப்படி உயர்வு வழங்கியதற்கு நன்றியும், பழையபடி பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தை வழங்க வேண்டும் என்றும், பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டு, நிறுத்தி வைத்துள்ள ஊக்க ஊதிய உயர்வு,சரண்டர் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இயக்க பொதுச் செயலாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொறுமையாக கேட்டதுடன் ஆவண செய்வதாக கூறினார்கள்.உடன் மாநிலத் தலைவர் இலட்சுமிபதி திருவண்ணாமலை மாவட்ட தலைவர் அன்பழகன்,மாநில துணைப் பொதுச் செயலாளர் புருஷோத்தமன் உடன் இருந்தனர். மாலை மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் க.அறிவொளி அவர்களை சந்தித்து பேச இயக்குனரகம் சென்ற நிலையில் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் க.அறிவொளி அவர்கள் மதுரையில் எண்ணும் எழுத்தும் பயிற்சியில் இருப்பதாக அறிந்த நிலையில் பொதுச் செயலாளர் அவர்கள் தொலைபேசியில் மதிப்புமிகு...

மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் வரும் வாய்ப்பு....

  எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே ! எத்தனை போராட்டம், எத்தனை ஆர்ப்பாட்டம்,மேடை தோறும் பழையபடி பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தை அளிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோரிடம் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நமது பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் வலியுறுத்தி பேசி வந்தார்கள் என்பதை அனைவரும் அறிவீர்கள். வாழ்வாதார மாநாட்டில் அரசாணை எண் 101, ரத்து செய்யப்பட்டாலும்,மழை நின்றும் தூவானம் விடவில்லை என்பதுபோல அரசாணை 101 ரத்து செய்யப்பட்டும் பழைய நிலை திரும்ப வில்லை, பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் எட்டாக் கனியாக இருந்தது. அதிகாரிகள் அத்துமீறல்கள்  அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதனால்தான் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்த உடன் மூன்று அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தபோது அதிகாரிகள் அத்துமீறல்கள் அதிகமாக உள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பொதுச் செயலாளர் அவர்கள் செய்தியாளர் கூட்டத்திலும் அதிகாரிகளின் அத்து மீறல்களை சுட்டிக் காட்டினார்கள். பள்ளிக் கல்வி இயக்குநர் வளாகம் பள்ளிக் கல்வி ஆணையர் வளாகமாக மாறியது. இந்த...

மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுடன் நமது பொதுச்செயலாளர் சந்திப்பு....

Image
  உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடும்போம் இன்று மக்கள் நாயகன் முன்னாள் பள்ளிக் கல்வி துறை அமைச்சர், இந்நாள் நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களை ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப் பாளரும், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போது பொதுச் செயலாளர் அவர்களை அன்புடன்   வரவேற்ற அமைச்சர் அவர்கள் "பள்ளிக் கல்வித் துறை அதில் பணியாற்றும் ஆசிரியர் நலன் அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர் நலம் முற்றும் அறிந்துள்ளேன். உங்கள் கோரிக்கைகள் அனைத்திற்கும் உரிய நேரத்தில் தீர்வு காணப்படும்" என்று கூறியது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.இ ன்றைய சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் நமது இயக்க இதழை பார்த்து ரசித்த அமைச்சர் இது ஒரு வரலாறு என்று பாராட்டினார்கள். உடன் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். - மாந...

பொதுச்செயலாளர் அவர்களின் வாழ்த்து மடல்...

Image
  மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சரும் ஜாக்டோ ஜியோ முற்றுகைப் போராட்டம் அறிவித்தவுடன் அழைத்து போசிய மூவர் குழுவில் ஆசிரியர் அரசு ஊழியர் பிரச்சனைகளை உள்வாங்கி மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றவரும், எதையும் ஆழ்ந்து அறிந்து புரிதலோடு முடிவு எடுக்கும் ஆற்றல் வாய்ந்த மாண்புமிகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. ஆசிரியர் அரசு ஊழியர் வாழ்வில் நம்பிக்கை ஒளி வீச தொடங்கி இருக்கிறது. இழந்த D A,சரண்டர் ஊக்க ஊதிய உயர்வு,அனைவரும் எதிர்பார்க்கும் CPS ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டு ஆகிய பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்.தெரிவித்துக் கொள்கிறேன்.            இரா.தாஸ் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பொதுச் செயலாளர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் முதல்கட்ட வெற்றி... தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

Image
  பழைய ஓய்வூதியத் திட்டம்,பணிப்பாதுகாப்பு, சரண்டர், ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறது இவற்றின் தொடர்ச்சியாக இதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட நிகழ்வாக கோட்டை முற்றுகை போராட்டத்தை நடத்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்து அதற்கான கலந்துரையாடல் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.       இதன் காரணமாக தமிழக அரசு அமைச்சர்கள் குழு ஜாக்டோ ஜியோ உடன் பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளது.  நமது பொதுச் செயலாளர் திரு இரா.தாஸ் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள்,  இன்று காலை 10:30 மணி அளவில் திரு எ.வ. வேலு, திரு தங்கம் தென்னரசு, திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அடங்கிய ஆகியோர் அடங்கிய அமைச்சர்களுக்கு குழு உடன்  தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

கோட்டை முற்றுகை போராட்டம் ஜாக்டோ ஜியோ ஆலோசனைக் கூட்டம்

Image
  அடுத்த கட்ட போராட்ட நிகழ்வான கோட்டை முற்றுகை போராட்டத்தை சிறப்பான முறையில் முன்னெடுத்து கோரிக்கைகளை வென்றெடுக்க ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட நமது பொதுச் செயலாளர் ஆசிரியர்களின் விடிவெள்ளி திரு இரா.தாஸ் அவர்கள் போராட்டத்தின் வீச்சு எவ்வாறு இருக்க வேண்டும், அதற்கான நமது நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என கலந்துரையாடினார்.

இயக்க நிறுவனரின் நினைவு நாள் பொதுச்செயலாளர் புகழ் அஞ்சலி

Image
 தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க நிறுவனர்,ஆசிரியர் இனக்காவலர் அண்ணன் ச.அப்துல்மஜீத் அவர்களின் 8 ம் ஆண்டு நினைவஞ்சலி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரம் பொன்செய் அரசு உதவிப்பெறும் நடுநிலைப்பள்ளியில் மாநில பொதுச்செயலாளர் மாவீரன் அண்ணன் இரா.தாஸ்,மாநிலத்தலைவர் அண்ணன் ஆ.இலட்சுமிபதி,மாநில துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் முருகன் மற்றும் செம்பொன் வட்டாரப்பொறுப்பாளர்கள்,மாவட்ட, மாநிலப்பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு ஆசிரியர் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஆசிரியர் இனக்காவலர் அண்ணன் ச.அப்துல்மஜீத் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினர்.

ஜாக்டோ ஜியோ போராட்ட முன்மொழிவு - பொதுச்செயலாளர் வீர உரை

Image
  நேற்று காலை திருச்சியில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தின் தொடர்ச்சியாக மாலை நமது பொதுச்செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற  உயர்மட்ட குழுக் கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ  அடுத்த கட்ட போராட்ட முன்மொழிவினை நமது பொதுச் செயலாளர் இரா தாஸ் அவர்கள் சமர்ப்பித்து வீர உரை ஆற்றினார்.

கொள்ளிடத்தில்‌ தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணி சார்பில்‌ இயக்கக் கொடியேற்றும்‌ நிகழ்ச்சி

Image
  மயிலாடுதுறை மாவட்‌டம்‌, கொள்ளிடத்தில்‌ தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின்‌ சார்பில்‌ இயக்ககொடியேற்று விழாவும்‌, ஆசிரியர்களுக்கு பணி நிறைவுபாராட்டு விழாவும்‌ நடைபெற்றது. விழாவிற்கு வட்டார தலைவர்‌ சிங்காரவேலு தலைமை வகித்தார்‌. வட்டார செயலாளர்‌ சங்‌கர்‌ வரவேற்றார்‌. மாநில துணைப்‌ பொதுச்‌ செயலாளர்‌ கமலநாதன்‌, மாவட்டச்செயலாளர்‌ சண்முகசுந்தரம்‌, மாநில துணைத்தலைவர்‌ கார்த்திகேயன்‌, மாவட்ட மகளிரணி செயலாளர்‌ கலைச்செல்வி, ஒன்றிய மகளிரணி செயலாளர்‌ சுமதி ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்‌. மாநில செயற்‌குழு உறுப்பினர்‌ கண்ணன்‌ ஆண்டறிக்கை வாசித்தார்‌. மாநிலத்‌ தலைவர்‌ திரு.லட்சுமிபதி, மாநில பொருளாளர்‌ திரு தியாகராஜன்‌, கொள்ளிடம்‌ ஒன்றியகுழு தலைவர்‌ திரு.ஜெயபிரகாஷ்‌, திமுக ஒன்றிய செயலாளர்‌ திரு.ரவிக்‌குமார்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்‌. மாநில பொதுச்செயலாளர் திரு.இரா.தாஸ்‌ அவர்கள் கலந்துகொண்டு இயக்க கொடியை ஏற்றி வைத்து பேசுகையில்‌, பழைய ஓய்வூதிய திட்‌டத்தை அமல்படுத்த வேண்டும்‌. காலியாக உள்ள அரசு ஊழியர்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ பணியிடங்களைஉடனடியாக நிரப்ப வேண்‌டும்‌. அவுட்சோர்ஸ்‌சிங்‌ மு...

ஆசிரியர் இனக்காவலர் மாவீரன் அப்துல் மஜீத் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி...

Image
 நமது இயக்க நிறுவனரும், சமரசமற்ற போராளியுமான அண்ணன் மாவீரன் ச.அப்துல் மஜீத் அவர்களின் 8 ஆம் நினைவு நாளை ஒட்டி நமது பொதுச்செயலாளர் இரா.தாஸ் அவர்களின் புகழ் அஞ்சலி....

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

Image
 *இன்று ( 02.04.23 ) திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் மாநில உயர்மட்ட குழு கூட்டம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கீழ்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்துவது என முடிவாற்றப்பட்டது.* *1. நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிரந்தர அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் ஊதியம் வாங்குகிறார்கள். தொகுப்பூதிய பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை வாங்குகிறார்கள் என்று சொல்லி அவுட்சோர்சிங் நியமனங்களை முன்னெடுப்பதற்கான முன் மொழிவுகளை தமிழக முதலமைச்சரை வைத்துக்கொண்டு மாண்புமிகு தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் திரு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பேசியதை கண்டித்து கண்டன தீர்மானம் ஏகமனதாக இயற்றப்பட்டது.* *2. எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தினை கூட்டி ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் இயக்கத்தை சிறப்பாக நடத்துவது ...

ஐம்பெரும் விழா கண்ட செங்கம் வட்டாரம் - பொதுச்செயலாளர், மாநிலத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு

Image
நேற்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செங்கம் வட்டாரத்தின் சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் நமது போர்வாள் பொதுச் செயலாளர் அண்ணன் இரா.தாஸ் மற்றும் செயல்வீரர் மாநிலத் தலைவர் திரு லட்சுமிபதி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்குபெற்று விழாவினை சிறப்பித்தனர்.   செங்கம் வட்டார தலைவர் திரு. குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நமது மாநிலத்தலைவர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவாகவும், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டு விழாவாகவும் அமைந்த இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு அப்துல் மஜீத் விருது மற்றும் தேசிய திறனறித் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு பெற்ற மாணவர்களுக்கு அப்துல் கலாம் விருதும் வழங்கி நமது பொதுச் செயலாளர் இரா தாஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் துணைப் பொதுச் செயலாளர் திரு. முருகன், மகளிர் அணி செயலாளர் திருமதி. டெய்சிஅறச்செல்வி மாநில துணைத்தலைவர்கள் சுரேஷ், சிவலிங்கம், மாலதி,கடலூர் மாவட்டச் செயலாளர் திரு.நமச்சிவாயம் ,செங்கம் வட்டார செயலாளர் திரு.குமரேசன் உள்ளிட்ட மாநில மாவட்ட...

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு... மாவட்ட ஆயத்த மாநாடு

Image
  ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு... மாவட்ட ஆயத்த மாநாடு. மதுரையில் 08-01-2023 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி 19-02-2023 அன்று மாவட்ட தலைநகரங்களில் வாழ்வாதார உரிமை மீட்பு மாவட்ட ஆயத்த மாநாடு நடைபெற உள்ளது அதன் அம் மாநாடுகளில் கலந்து கொள்ளும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் அவர்களின் சூறாவளி சுற்றுப்பயணம், பெரம்பலூர் மாவட்டம்

Image
           இரவு பகல் பாராது இயக்க நிறுவனர் மாவீரர் அப்துல் மஜீத் அவர்களின் வழியில் தொடர்ந்து இயக்க வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்து வரும் நமது பொதுச்செயலாளர் அண்ணன் இரா.தாஸ் அவரகள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் சுற்றுப்பயணத்தின் போது, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்ற வீரர் இயக்க தளபதி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அருள் ஜோதி அவர்களுக்கு இரண்டாவது தவணையாக நாட்காட்டிகளை வழங்கி மேலும் சிறப்பாக செயல்பட பாராட்டுகளை வழங்கினார்.

ஜாக்டோ ஜியோ தொடக்க நடுநிலைப்பள்ளி சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு....

Image
சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் (தொடக்க நடுநிலைப்பள்ளி சங்கங்களின்) சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி... நமது தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கீழ்கண்ட மாவட்டங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்கள் (1) திருவள்ளூர் (2) இராணிப்பேட்டை (3) திருப்பத்தூர் (4)கடலூர் (5) விழுப்புரம் (6) கள்ளக்குறிச்சி  (7) நாகப்பட்டினம் (8) மயிலாடுதுரை (9) பெரம்பலூர்  (10) தர்மபுரி (11) மதுரை (12) கன்னியாகுமரி இவண்.. திரு. ஆ.இலட்சுமிபதி  மாநில தலைவர்  திருமிகு. இரா.தாஸ்  பொதுச் செயலாளர் திரு. பி.தியாகராஜன்  மாநில பொருளாளர்  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,  ச.அப்துல் மஜீத் மாளிகை,  சென்னை-5.

தமிழ்வழிக் கல்வி - பொதுச்செயலாளர் அவர்களின் பத்திரிகைச் செய்தி

Image